Posts

Showing posts from February, 2024

தன்வியின் பிறந்தநாள் -புத்தக விமர்சனம்

Image
தன்வியின் பிறந்தநாள் இந்த புத்தகம் சிறுவர்களின் எண்ணங்களை அழகாக பிரதிபலிக்கிறது. தன்வியின் பிறந்தநாள்:- தன்வி கனவு இப்பொழுது இருக்கும் சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமானது. இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.என்று தெளிவாக நமக்கு உணர்த்தும் கதை. இயற்கை பேசுவது மிகவும் அருமை, இறுதியாக தன்விக்கு ரோஜா கொடுக்கும் முத்தம் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைவர் ஜெய் செய்தது சரியா? இந்த கதையில் ஜெய்யின் வெகுளித்தனம், மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் சிறப்பு, சிறுவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் ஒன்று உதவி செய்வது. உதவி செய்யும் குணம் சிறுவர்களுக்கு வேண்டும் என்று உணர்த்திய கதை‌ மிக அருமையாக இருந்தது. ஜெய்யின் அம்மா அவன் கூறுவதை காது கொடுத்து கேட்டு அவனை பாராட்டி இருக்கலாம். அவனது உதவி செய்யும் குணம் மேலும் வளர்ந்திருக்கும்‌. குட்டி நாய்க்கு பெயர் கிடைத்தது எப்படி? என்ற கதையில் அம்மாவின் அருமையையும் ,உயிரினங்களின் மேல் அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அனைத்து உயிரினங்களும் உணர்வுகள் உண்டு என்பதை நமக்கு உணர்த்திய கதை. தன்மையின் பூந்தோட்டம் குழந்தைகள் செடி ...

பொய்மான் கரடு - நூல் அறிமுகம்

Image
பொன்னியின் செல்வன் போல பெரிய பெரிய ராஜாக்களோ ராணிகளோ எவரும் இல்லை... இந்த கதையில் வரும் அனைவருமே சாதாரண ஏழை எளிய மக்கள்... மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த செங்கோட கவுண்டன், கதையின் நாயகன்... அவனை மட்டுமே திருமணம் செய்து கொள்ள நினைக்கும் செம்பா, கதையின் நாயகி.. இரு வழி பாதையாய் இருவரும் ஒரு வழியில் சென்று கொண்டிருக்கையில்.. நாயகனின் மனதை குழப்பும் மாதவியாய் வந்து சேருகிறாள், பங்கஜம் என்ற சினிமா ஆசை கொண்ட வருங்கால நடிகை... அவளுடனே சேர்ந்து அந்த ஊருக்கு புதுவரவாய் இரண்டு ஆண்கள்.. இவர்கள் மூவரால் செங்கோட கவுண்டன் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம்.. அவர்கள் ஏன் அந்த ஊருக்கு வந்துள்ளனர்? அவர்கள் ஆசை நிறைவேறியதா? என நீள்கிறது இக்கதை... இந்த குழப்பத்தினுள் இடையிடையே வந்து வந்து போகும், நேர்மையாக பணிபுரியும் ஒரு போலீஸ் அதிகாரி... கதையின் கடைசி பக்கத்தில் இந்த போலீஸ் கதாபாத்திரத்தால் ஒரு ஆச்சரியம், அது இக்கதையின் அற்புதம்... நான் படித்த வரையில் எந்த ஒரு கொலையும் நடக்காமல், ஒரு க்ரைம் திரில்லர் நாவல் வேண்டுமென்றால், அது பொய்மான் கரடாகத்தான் இருக்கும். (பின்குறிப்பு :-ஒரே ஒரு நாய் ...

சந்துருவுக்கு என்னாச்சு - நூல் அறிமுகம்

Image
புதிதாய் ஏதோ ஒன்றை பார்க்கும் போது, அது என்ன என்று தெரிந்து கொள்ள‌ பொதுவாகவே குழந்தைகளிடம் ஆர்வம் அதிகமாகவே உண்டு... அது நல்ல விடயங்கள் ஆனாலும் சரி, கெட்ட விடயங்கள் ஆனாலும் சரி... ஒரு விடயத்தைப் பற்றி முழுதாய் தெரிந்து கொள்ளாமலேயே, அது நல்லதா அல்லது கெட்டதா என குழந்தைகள் எவ்வாறு அறிவார்கள் ? அதனால், அனைத்தையும் பற்றி நம்மிடம் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்... நல்லதை பற்றி கேட்கும் போது நாம் பதில் சொல்ல எந்த பிரச்சினையும் இல்லை... ஆனால் சங்கடமான அல்லது மறைக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி வெளிப்படையாக கேள்விகளை கேட்கும் போது, நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்து, அவர்கள் எதை நோக்கி செல்ல போகிறார்கள் என்பது உள்ளது... இந்த கதையிலும் தருண் என்ற சிறுவனுக்கு அது போன்று ஒரு கேள்வி எழுகிறது.. தருண் தனது விடுமுறையை கழிக்க, நகரத்துக்கு, தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு வருகின்றான், அந்த வீட்டில் சந்துரு என்ற அண்ணனுடன் சேர்ந்து விளையாண்டு, பொழுதை கழிப்பது அவனுடைய திட்டம்... ஆனால் சந்துரு ஒரு ஆட்டிச குறைபாடு உடைய குழந்தை.. அதனால் அவனால் தருணுடன் விளையாடவோ, சகஜமாக பே...

சரசுவதிக்கு என்ன ஆச்சு-நூல் அறிமுகம்

Image
கரும்பலகை இல்லாமல் கூட பள்ளிகள் இருக்கலாம்... ஆனால் கழிவறை இல்லாமல் இருக்க கூடாது என்கிற உணர்வினை ஆழமாக ஏற்படுத்துகின்றது இந்த நூல்... அந்த மூன்று நாட்களில் கழிவறை இல்லா பள்ளியில் ஒரு அரசியல் கலவரத்தினால் தனியாக வகுப்பறைக்குள் மாட்டிக்கொள்ளும் சிறுமி சரசுவதி படும்பாட்டினை.. அவளின் வலியினை வாசிக்கும் ஆண்களுக்கும் கடத்தி வெற்றி கண்டு இருக்கின்றார் எழுத்தாளர் சி.சரிதா ஜோ அவர்கள்... சிறுநீர் கழிக்க இடமில்லாததால் குடிநீர் குடிக்க தவிர்க்கும் மாணவிகள்... சிறுநீர் கழிக்காததால் சிறுநீரக கல் பாதித்து துடிக்கும் மீனா கழிவறை இல்லாததால் மாதம் மூன்று நாள் விடுப்பு எடுக்கும் மாணவிகள்... தேர்வு என்றால் விடுப்பு இல்லை.. ஒரே நாப்கின் ஒருநாள் முழுவதும்... அதனால் ஏற்படும் உப பிரச்சனைகள்... என அடுக்கடுக்காய்... அலசி ஆராய்கிறது... பல இடங்களில் ஓங்கி அரைகிறது... இத்தனைக்கும்... கழிவறை கட்டும் பணி துவங்கி பல வருடங்களாக பாதியில் நிற்கும் அவலம்... அதில் உள்ள அரசியல் என விலாசி இருக்கிறார் எழுத்தாளர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்... புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித் புத்தகத்தின் ...

மலர் அல்ஜீப்ரா -நூல் அறிமுகம்

Image
ஆயிஷா நடராஜன் எழுதிய ஆயிஷா என்னும் நூலினை தொடர்ந்து என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஒரு புத்தகம் இந்த மலர் அல்ஜிப்ரா... வசந்த பிரியன் என்ற ஒரு கணித ஆசிரியரின் மறக்க முடியாத ஒரு மாணவி பற்றிய நாவல் தான் மலர் அல்ஜீப்ரா இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் வசந்த பிரியன் தன்னுடைய மாணவியை நினைவு கூறுகின்ற அந்த மேடைதான்... நாவல் முழுவதுமே வசந்த பிரியன் மேடையில் மலர் என்ற தன் மாணவியை பற்றி உரையாற்றும் விதமாக உள்ளது... இடையிடையில் பெண் கணிதவியலாளர்களை பற்றி அவர் கூறுகின்ற வரலாற்று பதிவுகள் மிகச் சிறப்பு.. இளையோர் நாவலில் இப்படிப்பட்ட வரலாற்று பதிவுகளை விறுவிறுப்பு குறையாமல் பதிவு செய்வது என்பது மிக பாராட்டப்பட வேண்டிய விஷயம் இதன் மூலம் இளையோர்களுக்கு கணித ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது... மலர் செய்த கணக்குகளாக இந்த நாவலில் வரக்கூடிய கணக்குகள் இளையவர்களுக்கு புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.. கணிதத்தின் மீது பேராவல் கொண்டவர்களுக்கு பெரும் தீனி இந்த மலர் அல்ஜீப்ரா... இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தில் வருகின்ற சங்கேத மொழி குறியீடும் அது பயன்படுத்தப்பட்டுள்ள...

சங்க இலக்கிய கதைகள்-நூல் அறிமுகம்

Image
2000 ஆண்டுக்கு முற்பட்ட தமிழின், சங்க இலக்கியங்களில் உள்ள சுவை மிகுந்த கதைகளை தொகுத்தெடுத்து, தற்கால மாணவர்கள் வாசிக்க எதுவாக, எளிமையான, அதே சமயம் பழமை மாறாமல் வழங்கியுள்ள நூல் இது... நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்ட அல்லது அறிந்த ஆட்டணத்தி, ஆதிமந்தி, பொற்கை பாண்டியன், நலங்கிள்ளி,நெடுங்கில்லி போன்றவர்களின் கதைகளை முழுமையாக ஒரே இடத்தில் படிப்பது சுகமான மற்றும் வியப்பான அனுபவமாக உள்ளது.. ஆற்றில் தொலைத்த ஆட்டனத்தியை, ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் வரை தேடிச்சென்று தன் கணவனை மீட்ட ஆதிமந்தியின் மனதிடம்... குற்றம் செய்தது தான்தான் என அறியாது, தன்னிடமே வந்து, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என முறையிடும் மக்களுக்காக, தன் கையை தானே வெட்டிக் கொண்ட பொற்கை பாண்டியனின் நேர்மை... சோழன் செங்காணனிடம் போரில் தோற்று மாட்டிக்கொண்ட இரும்பொறை, தண்ணீர் கூட குடிக்காமல், தன் நிலையை எண்ணி வருந்தியதும், அவரை தன் தமிழ் மூலம் பொய்கையார் எனும் புலவர் மீட்டு வந்த கதையின் மூலம், சுதந்திரத்தின், மானத்தின் அருமையை... பசுவிற்காக மகனை கொன்ற மனுநீதி... பெண் கொலை புரிந்த நன்னனின் கொடூர செயல், ...

கதைடாஸ்கோப்-நூல் அறிமுகம்

Image
உடைந்த சின்ன சின்ன வளையல் துண்டுகள் பல ஒன்றாக சேர்ந்து, பல வண்ண வடிவியல் மாயங்கள் செய்யும் கருவிதான் கலைடாஸ்கோப்... அதுபோலவே, கதைடாஸ்கோப் என்ற ஒரு கற்பனையான கருவி மூலம், பல சின்னஞ் சிறிய கதைகளை, ஒரு பெரிய கதையாக, நம்மிடம் சொல்ல வைத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்... ஒரு பக்க அல்லது சிறு கதையினை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை, ஒரு குறு நாவலின் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.. ஏனெனில் பல சிறுகதைகளை சேர்த்து ஒரு குறுநாவலை படைத்துள்ளார் ஆசிரியர் இரா நடராசன்... அனைத்து கதைகளுமே, மாணவர்களின் அடிப்படை குண நலன்களைப் பற்றியதாக உள்ளது.. விட்டுக் கொடுத்தல், ஒற்றுமையாக வாழ்தல், புறம் பேச கூடாது போன்ற சிறிய சிறிய, ஆனால், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை ஒவ்வொரு கதைகளின் மூலம் எளிமையாக விளக்குகிறார்... ஒரு கதை முடிந்த பிறகு அந்த கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்று சொன்னால் மட்டுமே அடுத்த கதை உண்டு என்று கதைடாஸ்கோப் சொல்வது, மாணவர்களை கதைகளைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு விமர்சனம் எழுதவும் (சொல்லவும்) தூண்டச் செய்வது ...

ஒரே ஒரு ஊர்ல-நூல் அறிமுகம்

Image
இப்புத்தகம் ஒரு சிறார் நாவல் வகைமையைச் சேர்ந்தது.. மிக மிக எளிய நடை ஆனால் விறுவிறுப்புக்கு எந்த குறைவும் இல்லை.. முக்கியமாக கதையின் கதாபாத்திரத்தை இவர் அறிமுகம் செய்யும் விதம் சிறப்பு, எடுத்துக்காட்டாக, ஆராதனா என்ற சிறுமியையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களையும், அச்சிறுமி வளர்க்கும் நாய் அறிமுகம் செய்வது போல எழுதி இருக்கும் நடை அழகு.. அவ்வப்போது கதையை நான் சொல்கிறேன், நீ சொல் என கதாபாத்திரங்களே தங்களுடைய கதைகளைத் தாங்களே மாற்றி மாற்றி சொல்லிக் கொள்ளும் விதமாக இக்கதையை விழியன் கையாண்டுள்ளார்.. அருண், ஆராதனா, சரவணன், செந்தில் என்ற நான்கு நண்பர்களும், அவர்களின் குடும்ப ஏற்றத்தாழ்வுகளும், ஆனாலும் அவர்களுக்குள் உள்ள நட்பும், அச்சிறுவர்கள் அவர்களுக்குள் அவர்களாகவே செய்து கொள்கின்ற உதவிகளும், அதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும்ணகதைகளாக நீள்கிறது பள்ளியின் தொடர் விடுமுறை காலத்தில், அவர்கள் தங்கள் பொழுதுகளைப் போக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி, அதனால் உண்டாகும் ஒரு சிறிய பயணம்.. அந்த பயணத்தில் ஏற்படுகின்ற அனுபவமே கதையின் கரு... வாழ்க்கையில் ஒரு புதிய உறவை சிறி...

ஒரு தோழனும் 3 நண்பர்களும் :-நூல் அறிமுகம்

Image
சென்னையிலிருந்து டெல்லி நோக்கி பயணிக்கும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்.. மொத்தமாக 34 மணி நேர பயணம்.. அந்த அழகான ரயில் பயணத்திற்கு தயாராகும் 4 நபர்கள் கொண்ட ஒரு குடும்பம்.. குடும்பத் தலைவர் சதுரங்க பலகையோடு பயணிக்கிறார்.. சதுரங்க பலகையில் வரலாற்றில் ஆதி முதல் அந்தம் வரை அவருக்கு அடுத்தபடி... கதை முழுக்க ஆங்காங்கே இரைந்து கிடக்கிறது சதுரங்க ஆட்டத்தின் முழு நீள வரலாறு.. ஆனாலும் கதையின் விறுவிறுப்பு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை மிஞ்சும் வகையிலேயே உள்ளது... அந்த பயணத்தில் அந்த சதுரங்க பலகையினால் கிடைத்த நட்புகளும், அந்த நட்புக்களோடு சதுரங்க ஆட்டம் ஆடிக்கொண்டே பேசப்படும் சதுரங்கத்தின் வரலாறும் அருமை.. ஆனாலும் இந்த கதையின் உடைய மையம், அந்த ரயிலில், ஒரு அடிமை போல் வேலை செய்யும், தோழர் என்னும் ஒரு அனாதை சிறுவன் தான்... தன் வாழ்வில், அந்த நிலையிலும், அந்த ரயில் பயணிகளுக்கு அவனால் கிடைக்கும் உதவிகளும், அந்த உதவியின் பலனாக, அவனுக்கு விழும் அடி, உதைகளும் மனதில் ஆறாத வடுக்கள்... அந்த சிறுவனின் கதையையும், அவனுடைய காயங்களையும் பார்த்து இக்குடும்பம் அவனுக்கு உதவி செய்ய முன் வருகிறது... ...

வாசிக்காத புத்தகத்தின் வாசனை - நூல் அறிமுகம்

Image
தனக்கு பயன்படும் உயிர்களை மட்டுமே மனிதன் தன்னோடு வைத்துக் கொள்கின்றான்.. மரங்களும் அப்படித்தான்... மரம் வளர்ப்பது என்பது ஒரு காலத்திற்கு பிறகு வெட்டுவதற்கும், அதுவரை அதிலிருந்து கனியையோ அல்லது நிழலையோ அனுபவிப்பதற்கும் மட்டும்தான்... சுற்றுச்சூழலை பற்றி கொஞ்சம் யோசிக்காத மோசமான விலங்கு மனிதன்... அப்படிப்பட்ட மனிதக் கூட்டங்களால் மழுங்கடிக்கப்பட்டு, மரம் வெட்டும் தொழிலையே பல வருடங்களாக செய்து வருகின்ற ஒரு கிராமம்.. அதுவும் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் தொழில்.... அந்த தொழிலுக்கு போகும் தன் அப்பாவுடன் உதவிக்கு செல்லும் ஒரு சிறுவன்.... கையில் பொழுதுபோக்குக்காக கொண்டு சென்ற ஒரு ரேடியோ பெட்டி.. அதில் எதர்ச்சையாக ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.... கேட்டுக்கொண்டே, அப்பா சொன்ன வேலையை செய்து கொண்டிருக்கின்றான் அச்சிறுவன்... கேட்க கேட்க அந்த புத்தகத்தை வாசித்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான்... அந்த புத்தகத்தை அடைவதற்கு இருக்கின்ற வழிகளை யோசிக்கின்றான்... தன் அப்பா செய்யும் இத்தொழிலை பற்றி மிகவும் கவலைப்படுகின்றான்.. மரங்களினுடைய முக்கியத்...

மாகடிகாரம் - புத்தக அறிமுகம்

Image
மூடநம்பிக்கை என்பது நம் அனைவரிடமும் ஏதோ ஒரு ரூபத்தில் மறைந்தோ அல்லது வெளிப்படையாகவோ, இருந்து கொண்டு தான் உள்ளது...என்னதான் நாம் அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இதுதான் உண்மை... ஏன் ? எதற்கு ? எப்படி ? இந்த மூன்றையும், நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கேட்ட பிறகே, அதனை நம்ப வேண்டும் என்று அறிவியலும் சொல்லுகிறது, நாத்திகமும் சொல்லுகிறது... ஆனால் சில இடங்களில் மட்டும், நாம் இந்த கேள்விகளை கேட்டு விட்டு, பல இடங்களில், கேட்க மறந்து காதால் கேட்பதை அப்படியே நம்பி, செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம், "ஈ அடித்தான் காஃபி" என்பார்களே அதுபோல... இந்த கதையும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.. தீமன் எனும் ஒரு சிறுவன் தன் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு பயணம் செய்கின்ற போது, தற்செயலாக ஒரு வயதான தாத்தாவை சந்திக்கின்றான், அந்த தாத்தாமூலம், இந்த உலகத்தின் ஒரு முக்கியமான ரகசியத்தை தெரிந்துகொண்டு அதை காக்க வேண்டிய பொறுப்பையும் பெறுகின்றான், கிட்டதட்ட உலகை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ போல... தனக்கு கிடைத்த பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற, உலகின் பல இடங்களுக்கு பயணப்படுகின்றான்.. அவன் ...

பறக்கும் யானைகள்-விமர்சனம்

Image
பறக்கும் யானைகள் ஒரு சிறார் கதையாகும். இதில் பத்து விதமான அற்புத கதைகள் உள்ளன. இதில் பறக்கும் யானைகள் மற்றும் குண்டு எறும்பு கதைகள் ஆச்சரியமாக இருந்தது பாட்டியின் பரிசு, வானம் தூக்கும் போட்டி போன்ற கதைகள் கருத்துள்ளதாக இருந்தது. வாய்ப்பூட்டும், கேக்க பெக்க கதைகள் படிக்க மிகவும் சிறப்பு தரும் வகையில் இருந்தது. எனக்கு பிடிக்காத கதை டப் டப் டப்,இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை, இறக்கை என்ற கதையை படித்ததும் எனக்கு ஞாபகம் வந்தது, நான் சில சமயம் மனிதனாக பிறக்காமல் ஒரு பறவையாக பிறந்திருக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் நம் பிறவியே நமக்கு என்று புரிந்து கொண்டேன். இக்கதை எனக்கு பிடித்தது. விமர்சனம் செய்தவர்:- தெ.சுபஸ்ரீ வகுப்பு:- 8 பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு புத்தகத்தின் பெயர் :- பறக்கும் யானைகள் ஆசிரியர் பெயர்:- பிரசாந்த் வே

பரிசோதனை செய்து பார்ப்போமா?-விமர்சனம்

Image
படித்த புத்தகத்தின் பெயர் பரிசோதனை செய்து பார்ப்போமா? இந்த புத்தகத்தை நான் மெய்மறந்து படித்தேன், இந்த புத்தகத்தை படிக்கும் போது நான் ஒரு எளிமையான அறிவியல் புத்தகத்தை படிப்பது போலவே உணர்ந்தேன் நான் முதன்முதலில் மிகுந்த ஆர்வத்துடன் படித்த புத்தகம் இதுதான், இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்று தோன்றியது, இந்த புத்தகத்தை படித்துவிட்டு, இந்த புத்தகத்தைப் பற்றி பெருமையாக பலரிடமும் புலம்பினேன் எனக்கு அந்த சோதனைகள் அனைத்தும் பிடித்திருந்தது, குறிப்பாக எனக்கு நிழல் சோதனை ரொம்ப பிடித்திருந்தது, இந்த புத்தகத்தை படிக்கும்போது, சிறு வகுப்பு படிக்கும் மாணவர்கள் வானவில் மன்றம் நினைவுக்கு வந்தது, இந்த புத்தகம் அறிவியல் சோதனைகளை நன்கு விளக்குகிறது. இந்த புத்தகம் அறிவியல் சோதனைகளை எளிதாகிறது எனக்கு இந்த புத்தகம் மிகவும் பிடித்திருக்கிறது, மேலும் சிறுபிள்ளையில் வீட்டில் மின்சாரம் நின்று விட்டால், நான் என் நண்பர்கள் அனைவரும் நிழல் நாடகத்தை நடத்துவோம், இந்த புத்தகத்தை படிக்கும்போது அது போன்ற பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.. இந்த புத்தகத்தை படித்த பிறகு பல அ...

ஒற்றைச் சிறகு ஓவியா-விமர்சனம்

Image
நான் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதிய, இரண்டாவது சிறுவர் நாவலான, ஒற்றை சிறகு ஓவியா என்ற புத்தகத்தை படித்தேன். இந்த புத்தகத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்புத்தகம் மிகவும் அருமையாக இருந்தது, இந்த புத்தகத்தில் எனக்கு தெரியாத பல விஷயங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டேன், இயற்கை விவசாயத்திற்கும் மற்றும் தண்ணீருக்கும், மண்ணெண்ணெய் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பு, சாலை மறியல் மற்றும் மண்புழுப்பை பற்றி தெரிந்து கொண்டேன், ஓவியா என்கிற ஒரு சிறுமி, தன் கனவில் வந்ததை அவளுடைய நான்கு நண்பர்கள் மற்றும் பியூன் கதிரேசன் தாத்தா ஆகியோரிடம் கூறி அதை நிஜத்தில் செய்கிறாள், அப்படியே நடக்கிறது ஓவியா டீமுக்கு தெரிந்த இந்த ரகசியம், விக்னேஷ் என்கிற ஒரு பையனின் டீமுக்கு தெரிந்து விட்டது, இதற்கு அடுத்து நான்கு முக்கிய சம்பவங்கள் உள்ளன. அந்த சம்பவங்களை படித்ததும் எனக்கு நிறைய அனுபவங்கள் என் ஞாபகங்களுக்கு வந்தன. " எனக்கு இந்த புத்தகத்தில் சடுகுடு பாண்டி, கடகடவென ஓடி , பட பட வெடிக்கும் பட்டாசை ,குடுகுடுவென வாங்கி, தடதட ஓடி வந்தான் ,தீபாவளிக்கு சடசடவென்று வெடித்தான்." பாட்...

மரப்பாச்சி சொன்ன ரகசியம்-விமர்சனம்

Image
மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்பது ஒரு வித்தியாசமான மற்றும் சிறப்பான புத்தகமாக இருந்தது. வித்யாசமான சிந்தனை ,வித்தியாசமான கதை ,வித்தியாசமான பெயர். பெண்களின் உச்சகட்ட பிரச்சனையான பாலியல் தொல்லையையும், பழைய பாரம்பரியமான மரப்பாச்சி பொம்மையையும், அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் இது. ஒரு பொம்மைக்கு திடீரென உயிர் வருவதையே யாராலும் நம்ப முடியாது, இதில் அந்த பொம்மையே ஒருவருக்கு உதவி செய்கிறது. வித்தியாசமாக இருந்தாலும் சிறப்பான புத்தகமாக இருந்தது. இந்த புத்தகத்தில் 13 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது. உலகத்திற்கு ஏற்ற ஒரு சமூக நூலாக இப்புத்தகம் உள்ளது. பூஜா என்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யும் தாத்தாவிற்கு தண்டனை அளிப்பதற்காக ஷாலினியும் மரபாச்சியும் உதவியது அவர்களின் நட்பை வெளிகாட்டுகிறது. பெண்களுக்கு ஏதாவது ஒன்று தவறாக தெரிந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் என்று இந்த புத்தகம் மரப்பாச்சி பொம்மையின் மூலமாக அறிவுறுத்துகிறது. இந்த புத்தகத்தின் இறுதியில் மரப்பாச்சி பொம...

உயர பறந்த இந்திய குருவி சாலீம் அலி-விமர்சனம்

Image
இந்த புத்தகம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது,ஏனென்றால்,அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும், எனக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியது, சாலிம் அலி எப்படி பறவைகளை ஆராய்ச்சி செய்தார், எப்படி பாதுகாத்து வந்தார் என்று புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெளிவாக இருந்தது பத்து வயதிலேயே அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார்,‌அவர் தன் ஆராய்ச்சியில் இருந்த போது தனக்குள்ளே கேள்வி எழுப்பு கொண்டார் , அந்த கேள்விகளுக்கு பதில் தெரியும் வரை அவர் அயராது பாடுபட்டார், எனக்கு மிகவும் இந்த புத்தகம் பிடித்திருந்தது. அவர் ஆராய்ச்சியில் 80 வயதிலும் தன் வேலையை விடவில்லை அவர் மறுபடியும் ஆராய்ச்சி செய்தார் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அவர் போல ஓயாமல் உழைக்க முயல்வேன் ர.பிரவீன் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரை கோட்டைக்காடு புத்தகத்தின் பெயர்:- உயரப் பறந்த இந்திய குருவி சாலிம் அலி புத்தகத்தின் ஆசிரியர்:- ஆதி வள்ளியப்பன்

மந்திரக்குடை-விமர்சனம்

Image
இந்த கதையில் வருபவர்கள்: தேவி ,சாதனா ,தும்பு ,வம்பு ,சிம்பு, தம்பு ,தும்பு என்பது பாம்பு , சிம்பு என்பது குரங்கு ,தம்பு என்பது யானை, வம்பு என்பது அணில். இக்கதையில் எனக்கு பிடித்தவை. 1) சுத்தமான ஓடை, மின்மினிப் பூச்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பிரகாசமான விளக்கு போல் தோன்றியது, 2) இக்கதையில் அணைத்து விலங்குகளும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தது 3) இரண்டு முயல் குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி விளையாடியது, 4)தேவி குடையில் வானத்தில் பறந்தது கதையில் எனக்கு பிடிக்காதது. தேவி, குடை சொன்னதை கேட்காமல் குடை சொன்ன "சிக்கிடு சிக்கிடுச்சா" என்னும் மந்திரத்தை சரியாக கேட்காமல் அலட்சியமாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. இக்கதையில் இருந்து நான் தெரிந்து கொண்டது எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் கடைசியில் அது நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும். விமர்சித்தவர் பெயர்:- பா.பவித்ரா வகுப்பு :- 8 பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு புத்தகத்தின் பெயர்:- மந்திர குடை ஆசிரியர் பெயர்:- ஞா.கலையரசி

கால்களில் ஒரு காடு-விமர்சனம்

Image
இந்த கதையில்,சுட்டி பையன் என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சுட்டி பையன் மாதிரி எனக்கு நிறைய ஊர்லலாம் சுத்தி பாக்கணும்னு ஆசை அந்தப் பையன் பள்ளியை விட்டு வெளியே ஊர் சுத்தினான்,அங்கு எங்க ஊர்ல இருக்கிற மாதிரி மரம் நிறைய இருக்கும், அதுக்கு தண்ணீர் ஊத்துறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அதுபோல அந்தச் சுட்டிப் பையனும் கடையில வாட்டர் கேன் வாங்கி தண்ணீர் நிரப்பி ஊத்தினான் ஒரு பட்டாம்பூச்சியின் முட்டையை மரம் வெட்டுபவர் உடைத்தான். அதை பார்த்து பட்டாம்பூச்சிக்கு கவலை இருந்தது பிடிக்கவில்லை. மறுநாள் காலையில் அந்த மோசமான மனிதன் மறுபடியும் முட்டையை உடைத்தது பிடிக்கவில்லை. அவனுக்கு தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும். விமர்சனம் எழுதியவர்:- செ.காவியா வகுப்பு :- 8 பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு புத்தகத்தின் பெயர்:- கால்களில் ஒரு காடு ஆசிரியர் பெயர்:- உதயசங்கர்

மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்-விமர்சனம்

Image
இந்த புத்தகத்தை நான் படிக்கும் முன்னர்,இந்த உலகத்தில் எனக்கு மட்டும்தான் கஷ்டம், துன்பம்,வேதனை இருக்கிறது என நினைத்தேன், இப்போது தான் புரிகிறது இந்த புத்தகத்தில் உள்ளவர்களை விட நான் ஒரு நல்ல வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறேன் என்று, ஒரு மனிதனை மனிதனாக நினைக்காமல், ஒரு மிருகத்தை விட கேவலமாக நடத்தி இருக்கிறார்கள், ஒரு மனிதனை தனது மாட்டை விட கேவலமாக நடத்திய அந்த சமுதாயம் மனிதர்களை, தாழ்ந்தவர், உயர்ந்தவர் என பாகுபாடு பார்த்தவர்களை பற்றி நினைத்தாலே எனக்கு ஆத்திரம் வருகின்றது. ஒரு பெண் பிரசவிக்கும் போது அவர்களுக்கு மேலே கூரை கூட இல்லை அவர்கள் வெயில்,மழை,குளிரென மிகவும் வேதனை பட்டு தனது பிள்ளைகளை பெற்றெடுப்பார். அந்த நிலைமையில் உங்களை நினைத்துப் பாருங்கள் எவ்வளவு வேதனை இருக்கும் என்று. அதைவிட மோசமான வேதனையை அந்த மக்கள் அனுபவித்து இருக்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை. சாதி, மதம் இனம் பாகுபாடு மனிதனின் மனதில் விதைத்து அவனை அதற்கானவனாகவே மாற்றியது இந்த சமூகம். அவன் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை கூட வாழ அருகதை இல்லை என்று நினைத்தது அந்த சமூகம், நல்ல ஆடை அணிந்தாலும் அதையும் நாங்களே அண...

சந்துருவுக்கு என்னாச்சு - விமர்சனம்

Image
நான் படித்த புத்தகத்தின் பெயர் சந்துருவுக்கு என்ன ஆச்சு? இந்த புத்தகத்தை எழுதியவர் யெஸ்.பாலபாரதி அவர்கள். இந்த புத்தகத்தை படித்த பிறகு நான் இந்த புத்தகத்திற்கு அடிமை ஆயிட்டேன்னும் சொல்லலாம். இந்த புத்தகத்தை படித்த பிறகு யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றும், அப்படி புண்படுத்தினால் அவர்கள் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதையும் இந்த கதை மூலம் புரிந்து கொண்டேன். இந்த புத்தகத்துக்கு பெயரை தப்பா வச்சிட்டாங்கனு நினைக்கின்றேன், இந்த புத்தகத்துக்கு தருணின் குழப்பம் தீர்ந்துவிட்டதா? என்று பெயர் வைத்திருக்கலாம். இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் ஆட்டிசம் என்ற ஒரு நோய் இருக்குதுன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டிலேயும் கோடை விடுமுறைக்கு எங்க சித்தி வீட்டுக்கு போவோம்,அது போன்ற பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. இந்த கதையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே தருண் வீடு லூசு வீடு என்று சொன்ன அந்தப் பையனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு இந்த கதையின் பெயரை படிச்சவுடன் சந்துருவுக்கு என்ன ஆச்சு? என்ன ஆயிருக்கும்? என்று மனசுல ஒரு முணங்கள். இந்த புத்தகத்தை படிக்கும்போது அடுத்து என்ன? அடுத்து என...

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்