சங்க இலக்கிய கதைகள்-நூல் அறிமுகம்

2000 ஆண்டுக்கு முற்பட்ட தமிழின், சங்க இலக்கியங்களில் உள்ள சுவை மிகுந்த கதைகளை தொகுத்தெடுத்து, தற்கால மாணவர்கள் வாசிக்க எதுவாக, எளிமையான, அதே சமயம் பழமை மாறாமல் வழங்கியுள்ள நூல் இது...

நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்ட அல்லது அறிந்த ஆட்டணத்தி, ஆதிமந்தி, பொற்கை பாண்டியன், நலங்கிள்ளி,நெடுங்கில்லி போன்றவர்களின் கதைகளை முழுமையாக ஒரே இடத்தில் படிப்பது சுகமான மற்றும் வியப்பான அனுபவமாக உள்ளது..

ஆற்றில் தொலைத்த ஆட்டனத்தியை, ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் வரை தேடிச்சென்று தன் கணவனை மீட்ட ஆதிமந்தியின் மனதிடம்...

குற்றம் செய்தது தான்தான் என அறியாது, தன்னிடமே வந்து, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என முறையிடும் மக்களுக்காக, தன் கையை தானே வெட்டிக் கொண்ட பொற்கை பாண்டியனின் நேர்மை...

சோழன் செங்காணனிடம் போரில் தோற்று மாட்டிக்கொண்ட இரும்பொறை, தண்ணீர் கூட குடிக்காமல், தன் நிலையை எண்ணி வருந்தியதும், அவரை தன் தமிழ் மூலம் பொய்கையார் எனும் புலவர் மீட்டு வந்த கதையின் மூலம், சுதந்திரத்தின், மானத்தின் அருமையை...

பசுவிற்காக மகனை கொன்ற மனுநீதி...

பெண் கொலை புரிந்த நன்னனின் கொடூர செயல், அதனால் அவன் அடைந்த பழி, இறுதி காலத்தில் அவனின் நிலை...

பாரி - கபிலர் ஆகியோரின் கண்ட நட்பு...

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் காணா நட்பு..

மரணிக்கும் போதும் மார்பில் உள்ள மணி மாலையினை பரிசளித்த நெடுஞ்சேரலாதன்...

தன் தலையையே வெட்டி பரிசளிக்க துணிந்த எட்டாம் வள்ளல் குமணன் கதை..

போன்றவற்றை இந்த தலைமுறைக்கு எளிய நடையில் கொண்டு சேர்ப்பதில் இந்த புத்தகம் வெற்றி கண்டுள்ளது.. மேற்சொன்ன கதைகள் உங்களுக்கும் தெரியவில்லை என்றால் நீங்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இந்த சங்க இலக்கிய கதைகள்...

(இந்த புத்தகத்தில் உள்ள கதைகளில் பெரும்பான்மையான கதை மாந்தர்களின் உடைய பெயர் மட்டும் தான் எனக்கு தெரிந்ததை தவிர அவர்களின் கதைகளை இப்புத்தகத்தின் மூலமே நான் அறிந்து கொண்டேன்)

மேலும், வெறும் கதைகளோடு மட்டும் இல்லாமல், ஒவ்வொரு கதையின் முடிவிலும், இந்த கதை எதன் அடிப்படையில், எந்த நூலில், எந்தெந்த பாடலின் அடிப்படையில் வந்தது என ஆதாரத்துடன் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- சங்க இலக்கிய கதைகள்
ஆசிரியர் பெயர் : ம சுரேந்திரன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்