மாகடிகாரம் - விமர்சனம்
மாகடிகாரம் என்னும் புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது, இதில் வரும் தீமன் என்ற பெயரும் வித்தியாசமானது, இது இரண்டையும் மையமாகக் கொண்டு ஒரு வித்தியாசமான கதையை எழுதியுள்ளார் விழியன் அவர்கள்
இந்தக் கதையில் வருகின்ற பல இடங்கள் உண்மையில் எனக்கு இதுவரை தெரியாத இடங்கள், இந்த புத்தகத்தின் மூலமே நான் இந்த இடங்களை அறிந்து கொண்டேன்,
இந்த உலகமே இயங்குவதற்கு காரணம் மாகடிகாரம் என்ற நம்பிக்கையை உடைத்தான் தீமன்,கதையின் இறுதி பக்கங்களைப் படிக்கும் போது ஆரம்பத்தில் இருந்ததுக்கும், பின் இருந்ததற்கும், பல மாற்றங்கள்.
ஆழ்கடல் முதல் உயரமான மலை வரை உள்ளடக்கிய ஒரு கதை, இறுதியில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க கூட இயலாத வகையில் பல மாற்றங்கள் இருந்தன, ஏலகிரி சென்ற தீமன் எதார்த்தமாய் சந்தித்த ஒரு தாத்தா, அவர் கூறிய சுவாரசியமான கதை, அதன் மூலம் தொடங்கிய பயணம்.. அதன் பின் நடந்தவையே இந்தக் கதையாக மாறியது
ஹெர்குலஸ், மடாகஸ் போன்ற பலரும் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல், முன்னோர்கள் சொன்னதை கேட்டு அது படியே நடந்தனர், ஆனால் தீமன் மட்டும் ஏன்..? எதற்கு..? என்று கேள்விகளை எழுப்பி ஆராயச் செய்தான்…
மாகடிகாரம் என்ற ஒன்று இருப்பதாக படிப்பவர்கள் நம்பும் அளவிற்கு கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது. விழியன் அவர்களின் நூலில் சிறந்த ஒன்றாக திகழ்கிறது இந்நூல்.
மரியான அகழி, மோனோலோஆ என்ற பல இடங்கள் இந்நூலில் கூறப்பட்டிருந்தது. ஆழ்கடலில் ஒரு கோட்டை ,என்ன முடியாத அளவிற்கு பெரிய கடிகாரம் போன்றவை வித்தியாசமாக இருந்தது. இறுதியில் மாகடிகாரம் நொறுக்கப்பட்டது. மொத்தத்தில் இது ஒரு மிகச்சிறந்த நூல்.
இதில் ஒளிந்திருக்கும் கருத்து ஒரு விஷயம் செய்வதற்கு முன் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்பதே
விமர்சனம் செய்தவர்:- பி.பிரதீப்
வகுப்பு:- 9
படிக்கும் பள்ளி:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைக்கோட்டைக்காடு.
புத்தகத்தின் பெயர்: மாகடிகாரம்
ஆசிரியர் பெயர்: விழியன்

Comments
Post a Comment