மரப்பாச்சி சொன்ன ரகசியம்-விமர்சனம்
மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்பது ஒரு வித்தியாசமான மற்றும் சிறப்பான புத்தகமாக இருந்தது. வித்யாசமான சிந்தனை ,வித்தியாசமான கதை ,வித்தியாசமான பெயர்.
பெண்களின் உச்சகட்ட பிரச்சனையான பாலியல் தொல்லையையும், பழைய பாரம்பரியமான மரப்பாச்சி பொம்மையையும், அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் இது.
ஒரு பொம்மைக்கு திடீரென உயிர் வருவதையே யாராலும் நம்ப முடியாது, இதில் அந்த பொம்மையே ஒருவருக்கு உதவி செய்கிறது. வித்தியாசமாக இருந்தாலும் சிறப்பான புத்தகமாக இருந்தது.
இந்த புத்தகத்தில் 13 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது. உலகத்திற்கு ஏற்ற ஒரு சமூக நூலாக இப்புத்தகம் உள்ளது.
பூஜா என்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யும் தாத்தாவிற்கு தண்டனை அளிப்பதற்காக ஷாலினியும் மரபாச்சியும் உதவியது அவர்களின் நட்பை வெளிகாட்டுகிறது.
பெண்களுக்கு ஏதாவது ஒன்று தவறாக தெரிந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் என்று இந்த புத்தகம் மரப்பாச்சி பொம்மையின் மூலமாக அறிவுறுத்துகிறது.
இந்த புத்தகத்தின் இறுதியில் மரப்பாச்சி பொம்மையை வைத்து எழுதும் போது அடுத்த புத்தகத்திற்கான குறிப்பு வைத்து குதூகலம் செய்துள்ளார் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி அவர்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், முக்கியமான முக்கியமாக பெண்கள் படிக்க வேண்டிய சிறந்த புத்தகமாக உள்ளது.
விமர்சனம் செய்தவர்:-பி.பிரதீப்
வகுப்பு :- 9
பள்ளியின் பெயர் :-அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரை கோட்டைக்காடு
நூலின் பெயர்:- மரப்பாச்சி சொன்ன ரகசியம்
நூலாசிரியர் பெயர் :- யெஸ்.பாலபாரதி

Comments
Post a Comment