தன்வியின் பிறந்தநாள் -புத்தக விமர்சனம்

தன்வியின் பிறந்தநாள் இந்த புத்தகம் சிறுவர்களின் எண்ணங்களை அழகாக பிரதிபலிக்கிறது. தன்வியின் பிறந்தநாள்:- தன்வி கனவு இப்பொழுது இருக்கும் சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமானது. இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.என்று தெளிவாக நமக்கு உணர்த்தும் கதை. இயற்கை பேசுவது மிகவும் அருமை, இறுதியாக தன்விக்கு ரோஜா கொடுக்கும் முத்தம் மிகவும் சிறப்பாக இருந்தது.

தலைவர் ஜெய் செய்தது சரியா? இந்த கதையில் ஜெய்யின் வெகுளித்தனம், மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் சிறப்பு, சிறுவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் ஒன்று உதவி செய்வது. உதவி செய்யும் குணம் சிறுவர்களுக்கு வேண்டும் என்று உணர்த்திய கதை‌ மிக அருமையாக இருந்தது. ஜெய்யின் அம்மா அவன் கூறுவதை காது கொடுத்து கேட்டு அவனை பாராட்டி இருக்கலாம். அவனது உதவி செய்யும் குணம் மேலும் வளர்ந்திருக்கும்‌.

குட்டி நாய்க்கு பெயர் கிடைத்தது எப்படி? என்ற கதையில் அம்மாவின் அருமையையும் ,உயிரினங்களின் மேல் அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அனைத்து உயிரினங்களும் உணர்வுகள் உண்டு என்பதை நமக்கு உணர்த்திய கதை.

தன்மையின் பூந்தோட்டம் குழந்தைகள் செடி மரம் வளர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் .என்பதை சிறுவர்களுக்கு தெரிவிக்கும் கதை .மரம் செடிகளை வளர்க்க சிறுவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

இயற்கை அழகை இவ்வளவு அழகாக ரசிக்க முடியும் நான் உணர்ந்த கதை. ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எனக்கு இந்த கதை, மயில் வண்ணத்துப்பூச்சி அதன் அழகை இவ்வளவு அழகாக ரசிக்க ஒரு மனம் வேண்டும் என்று நான் உணர்ந்த கதை.

அன்பளிப்பு குழந்தைகளின் எண்ணங்கள், உணர்வுகள், மிக விசித்திரமானவை என்பது இந்த கதையின் மூலம் நான் உணர்ந்தவை. விலங்கினங்களின் செயல்பாடுகள் ஒரே நாள் போல் தொடர்ச்சியாக இருக்கிறது. அன்பு செலுத்துவர்களிடம் மட்டுமே விலங்கினங்கள் கூட தொடர்ச்சியாக செல்கின்றன.

குணசுந்தரி எழுதிய தேர்வு குணசுந்தரியின் பெற்றோர் தன் மகளின் குறையை பொருட்படுத்தாமல் மற்ற குழந்தைகள் போல் அவளையும் வளர்க்க விரும்பினர். குணசுந்தரிக்கும் ஒரு திறமை இருந்தது .ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை உணர்த்திய கதை.

சிறகுத்தேள் இன்றைய சமுதாயம் நமக்கு கற்பிக்கும் ஆசிரியை அடித்து உதைத்து கொலை கூட செய்யும் சமுதாயமாக இருக்கிறது.ஆனால் இக்கதை இந்த சமுதாய மாணவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. தன் தங்கையின் உடல்நிலை கண்டு வருத்தப்பட்டாலும் ஆசிரியரின் வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளன என்று செயல்பட்ட அவனின் குணம் மிகவும் போற்றுதற்குறியது.

குழிக்குள் விழுந்த கோழி குஞ்சு நம் மனித இனத்தில் ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாம் அவர்களுக்கு அருகில் சென்று செல்பி எடுக்கும் இக்காலத்தில் கோழி குஞ்சுவை காப்பாற்ற அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இறுதியாக பருந்து அக்கோழிக்குஞ்சை தூக்காமல் இருந்து இருக்கலாம்.

வலியினால் அல்ல! தனக்கு துன்பம் கொடுக்கும் தன் தோழியை அன்பினால் வென்ற சிறுமி, மிகவும் அழகான கதை இது.

குழந்தைகளின் உலகம் வேறு அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொண்டு அதற்கு துணையாக இருக்க வேண்டும் அவர்களின் உலகத்தில், இயற்கை, பிராணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது . அவற்றின் உணர்வுகளை குழந்தைகள் உணர்கிறார்கள். குழந்தைகளிடம் இருக்கக்கூடிய குணங்களாகிய இயற்கை அழகை ரசித்தல், மற்றவர்களுக்கு உதவி செய்தல், உயிரினங்களிடம் அன்பு, மற்றவர்களை தன் அன்பினால் அவர்களின் தவற்றை உணர வைத்தல் போன்ற குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய குணாதியன்கள் நிறைந்த கதை புத்தகம் இது, கண்டிப்பாக குழந்தைகள் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தக அறிமுகம் செய்தவர்:- மு.சீதாலெட்சுமி
புத்தகத்தின் பெயர் :-தன்வியின் பிறந்தநாள்
ஆசிரியர் பெயர் : யூமா வாசுகி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்