பறக்கும் யானைகள்-விமர்சனம்
பறக்கும் யானைகள் ஒரு சிறார் கதையாகும். இதில் பத்து விதமான அற்புத கதைகள் உள்ளன. இதில் பறக்கும் யானைகள் மற்றும் குண்டு எறும்பு கதைகள் ஆச்சரியமாக இருந்தது
பாட்டியின் பரிசு, வானம் தூக்கும் போட்டி போன்ற கதைகள் கருத்துள்ளதாக இருந்தது.
வாய்ப்பூட்டும், கேக்க பெக்க கதைகள் படிக்க மிகவும் சிறப்பு தரும் வகையில் இருந்தது.
எனக்கு பிடிக்காத கதை டப் டப் டப்,இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை,
இறக்கை என்ற கதையை படித்ததும் எனக்கு ஞாபகம் வந்தது, நான் சில சமயம் மனிதனாக பிறக்காமல் ஒரு பறவையாக பிறந்திருக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் நம் பிறவியே நமக்கு என்று புரிந்து கொண்டேன். இக்கதை எனக்கு பிடித்தது.
விமர்சனம் செய்தவர்:- தெ.சுபஸ்ரீ
வகுப்பு:- 8
பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு
புத்தகத்தின் பெயர் :- பறக்கும் யானைகள் ஆசிரியர் பெயர்:- பிரசாந்த் வே

Comments
Post a Comment