சரசுவதிக்கு என்ன ஆச்சு-நூல் அறிமுகம்
கரும்பலகை இல்லாமல் கூட பள்ளிகள் இருக்கலாம்... ஆனால் கழிவறை இல்லாமல் இருக்க கூடாது என்கிற உணர்வினை ஆழமாக ஏற்படுத்துகின்றது இந்த நூல்...
அந்த மூன்று நாட்களில் கழிவறை இல்லா பள்ளியில் ஒரு அரசியல் கலவரத்தினால் தனியாக வகுப்பறைக்குள் மாட்டிக்கொள்ளும் சிறுமி சரசுவதி படும்பாட்டினை.. அவளின் வலியினை வாசிக்கும் ஆண்களுக்கும் கடத்தி வெற்றி கண்டு இருக்கின்றார் எழுத்தாளர் சி.சரிதா ஜோ அவர்கள்...
சிறுநீர் கழிக்க இடமில்லாததால் குடிநீர் குடிக்க தவிர்க்கும் மாணவிகள்...
சிறுநீர் கழிக்காததால் சிறுநீரக கல் பாதித்து துடிக்கும் மீனா
கழிவறை இல்லாததால் மாதம் மூன்று நாள் விடுப்பு எடுக்கும் மாணவிகள்...
தேர்வு என்றால் விடுப்பு இல்லை.. ஒரே நாப்கின் ஒருநாள் முழுவதும்...
அதனால் ஏற்படும் உப பிரச்சனைகள்...
என அடுக்கடுக்காய்... அலசி ஆராய்கிறது...
பல இடங்களில் ஓங்கி அரைகிறது...
இத்தனைக்கும்... கழிவறை கட்டும் பணி துவங்கி பல வருடங்களாக பாதியில் நிற்கும் அவலம்... அதில் உள்ள அரசியல் என விலாசி இருக்கிறார் எழுத்தாளர்
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்...
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- சரசுவதிக்கு என்னாச்சு
ஆசிரியர் பெயர் : சி.சரிதா ஜோ

Comments
Post a Comment