சந்துருவுக்கு என்னாச்சு - விமர்சனம்
நான் படித்த புத்தகத்தின் பெயர் சந்துருவுக்கு என்ன ஆச்சு? இந்த புத்தகத்தை எழுதியவர் யெஸ்.பாலபாரதி அவர்கள். இந்த புத்தகத்தை படித்த பிறகு நான் இந்த புத்தகத்திற்கு அடிமை ஆயிட்டேன்னும் சொல்லலாம்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றும், அப்படி புண்படுத்தினால் அவர்கள் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதையும் இந்த கதை மூலம் புரிந்து கொண்டேன்.
இந்த புத்தகத்துக்கு பெயரை தப்பா வச்சிட்டாங்கனு நினைக்கின்றேன், இந்த புத்தகத்துக்கு தருணின் குழப்பம் தீர்ந்துவிட்டதா? என்று பெயர் வைத்திருக்கலாம்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் ஆட்டிசம் என்ற ஒரு நோய் இருக்குதுன்னு எனக்கு தெரியும்.
எங்க வீட்டிலேயும் கோடை விடுமுறைக்கு எங்க சித்தி வீட்டுக்கு போவோம்,அது போன்ற பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது.
இந்த கதையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே தருண் வீடு லூசு வீடு என்று சொன்ன அந்தப் பையனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எனக்கு இந்த கதையின் பெயரை படிச்சவுடன் சந்துருவுக்கு என்ன ஆச்சு? என்ன ஆயிருக்கும்? என்று மனசுல ஒரு முணங்கள். இந்த புத்தகத்தை படிக்கும்போது அடுத்து என்ன? அடுத்து என்ன? இன்று என் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. இந்த புத்தகம் நன்றாக இருந்தது.
விமர்சனம் செய்தவர் :- மு.ஜோசிகா
வகுப்பு :- 10
பள்ளியின் பெயர் :- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு
புத்தகத்தின் பெயர்: சந்துருவுக்கு என்னாச்சு
ஆசிரியர் பெயர்: யெஸ்.பாலபாரதி

Comments
Post a Comment