மலர் அல்ஜீப்ரா -நூல் அறிமுகம்

ஆயிஷா நடராஜன் எழுதிய ஆயிஷா என்னும் நூலினை தொடர்ந்து என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஒரு புத்தகம் இந்த மலர் அல்ஜிப்ரா...

வசந்த பிரியன் என்ற ஒரு கணித ஆசிரியரின் மறக்க முடியாத ஒரு மாணவி பற்றிய நாவல் தான் மலர் அல்ஜீப்ரா

இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் வசந்த பிரியன் தன்னுடைய மாணவியை நினைவு கூறுகின்ற அந்த மேடைதான்... நாவல் முழுவதுமே வசந்த பிரியன் மேடையில் மலர் என்ற தன் மாணவியை பற்றி உரையாற்றும் விதமாக உள்ளது...

இடையிடையில் பெண் கணிதவியலாளர்களை பற்றி அவர் கூறுகின்ற வரலாற்று பதிவுகள் மிகச் சிறப்பு..

இளையோர் நாவலில் இப்படிப்பட்ட வரலாற்று பதிவுகளை விறுவிறுப்பு குறையாமல் பதிவு செய்வது என்பது மிக பாராட்டப்பட வேண்டிய விஷயம் இதன் மூலம் இளையோர்களுக்கு கணித ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது...

மலர் செய்த கணக்குகளாக இந்த நாவலில் வரக்கூடிய கணக்குகள் இளையவர்களுக்கு புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது..

கணிதத்தின் மீது பேராவல் கொண்டவர்களுக்கு பெரும் தீனி இந்த மலர் அல்ஜீப்ரா...

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தில் வருகின்ற சங்கேத மொழி குறியீடும் அது பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தின் சுவாரசியமும் மிக அருமை...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- மலர் அல்ஜீப்ரா
ஆசிரியர் பெயர் : ஆயிஷாஇரா.நடராசன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்