கதைடாஸ்கோப்-நூல் அறிமுகம்

உடைந்த சின்ன சின்ன வளையல் துண்டுகள் பல ஒன்றாக சேர்ந்து, பல வண்ண வடிவியல் மாயங்கள் செய்யும் கருவிதான் கலைடாஸ்கோப்...

அதுபோலவே, கதைடாஸ்கோப் என்ற ஒரு கற்பனையான கருவி மூலம், பல சின்னஞ் சிறிய கதைகளை, ஒரு பெரிய கதையாக, நம்மிடம் சொல்ல வைத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்...

ஒரு பக்க அல்லது சிறு கதையினை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை, ஒரு குறு நாவலின் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.. ஏனெனில் பல சிறுகதைகளை சேர்த்து ஒரு குறுநாவலை படைத்துள்ளார் ஆசிரியர் இரா நடராசன்...

அனைத்து கதைகளுமே, மாணவர்களின் அடிப்படை குண நலன்களைப் பற்றியதாக உள்ளது.. விட்டுக் கொடுத்தல், ஒற்றுமையாக வாழ்தல், புறம் பேச கூடாது போன்ற சிறிய சிறிய, ஆனால், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை ஒவ்வொரு கதைகளின் மூலம் எளிமையாக விளக்குகிறார்...

ஒரு கதை முடிந்த பிறகு அந்த கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்று சொன்னால் மட்டுமே அடுத்த கதை உண்டு என்று கதைடாஸ்கோப் சொல்வது, மாணவர்களை கதைகளைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு விமர்சனம் எழுதவும் (சொல்லவும்) தூண்டச் செய்வது இந்த நூலின் உடைய சிறப்பு...

ஆங்கில படங்களில் வரும் யுனிவர்ஸ் போல, பல கதைகளை கோர்த்து இவர் ஒரு கதை யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளது அடுத்த அடுத்த கதைகளை வாசிப்பதற்கு தூண்டுகிறது...

இறுதி கதையில் தொலைந்து போன எலியின் வாலையும், அதோடு தொலைந்து போன எலியின் நண்பனையும், இதுவரை சொன்ன கதையில் ஒரு கதையை ஞாபகப்படுத்த சொல்லும்போது படித்த கதைகளில் அந்த கதை எந்த கதை என மாணவர்களை சிந்திக்க செய்து மீளாய்வுக்கு வழி வகுத்துள்ளார்....

இந்த கதையை கண்டறிந்த எலியை கதையினை மெதுவாகச் சொல்ல சொல்லி ஒரு கதையிலிருந்து இன்னொரு கதையின் முடிவை தேடி கண்டுபிடிப்பது வித்தியாசமான முடிவாக இருந்தது...

ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரத்திற்கு இவர் தேர்ந்தெடுத்த பெயர் குழந்தைகளை கவரும் விதமாக உள்ளது...

கண்டிப்பாக குழந்தைகள் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த கதைடாஸ்கோப்....

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- கதைடாஸ்கோப்
ஆசிரியர் பெயர் :ஆயிஷாஇரா.நடராசன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்