ஒற்றைச் சிறகு ஓவியா-விமர்சனம்

நான் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதிய, இரண்டாவது சிறுவர் நாவலான, ஒற்றை சிறகு ஓவியா என்ற புத்தகத்தை படித்தேன்.

இந்த புத்தகத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்புத்தகம் மிகவும் அருமையாக இருந்தது, இந்த புத்தகத்தில் எனக்கு தெரியாத பல விஷயங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டேன்,

இயற்கை விவசாயத்திற்கும் மற்றும் தண்ணீருக்கும், மண்ணெண்ணெய் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பு, சாலை மறியல் மற்றும் மண்புழுப்பை பற்றி தெரிந்து கொண்டேன்,

ஓவியா என்கிற ஒரு சிறுமி, தன் கனவில் வந்ததை அவளுடைய நான்கு நண்பர்கள் மற்றும் பியூன் கதிரேசன் தாத்தா ஆகியோரிடம் கூறி அதை நிஜத்தில் செய்கிறாள், அப்படியே நடக்கிறது ஓவியா டீமுக்கு தெரிந்த இந்த ரகசியம், விக்னேஷ் என்கிற ஒரு பையனின் டீமுக்கு தெரிந்து விட்டது, இதற்கு அடுத்து நான்கு முக்கிய சம்பவங்கள் உள்ளன.

அந்த சம்பவங்களை படித்ததும் எனக்கு நிறைய அனுபவங்கள் என் ஞாபகங்களுக்கு வந்தன.

" எனக்கு இந்த புத்தகத்தில் சடுகுடு பாண்டி, கடகடவென ஓடி , பட பட வெடிக்கும் பட்டாசை ,குடுகுடுவென வாங்கி, தடதட ஓடி வந்தான் ,தீபாவளிக்கு சடசடவென்று வெடித்தான்." பாட்டி என்ற வரிகள் மிகவும் பிடித்திருந்தது.

இந்த கதை முடிந்தவுடன் புத்தகத்தில் நானும் பறந்தேன் என்று ஒரு தலைப்பு கொடுத்து கதை மாதிரியே எழுதி இருந்தாங்க நானும் அதை படித்தேன். நன்றாக அது இருந்தது. நன்றி .

விமர்சித்தவர் பெயர்:- ப.யாஷினி
வகுப்பு:- 9
பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு

புத்தகத்தின் பெயர்:- ஒற்றைச் சிறகு ஓவியா
ஆசிரியர் பெயர்:- விஷ்ணுபுரம் சரவணன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்