மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்-விமர்சனம்
இந்த புத்தகத்தை நான் படிக்கும் முன்னர்,இந்த உலகத்தில் எனக்கு மட்டும்தான் கஷ்டம், துன்பம்,வேதனை இருக்கிறது என நினைத்தேன், இப்போது தான் புரிகிறது இந்த புத்தகத்தில் உள்ளவர்களை விட நான் ஒரு நல்ல வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறேன் என்று,
ஒரு மனிதனை மனிதனாக நினைக்காமல், ஒரு மிருகத்தை விட கேவலமாக நடத்தி இருக்கிறார்கள்,
ஒரு மனிதனை தனது மாட்டை விட கேவலமாக நடத்திய அந்த சமுதாயம் மனிதர்களை, தாழ்ந்தவர், உயர்ந்தவர் என பாகுபாடு பார்த்தவர்களை பற்றி நினைத்தாலே எனக்கு ஆத்திரம் வருகின்றது.
ஒரு பெண் பிரசவிக்கும் போது அவர்களுக்கு மேலே கூரை கூட இல்லை அவர்கள் வெயில்,மழை,குளிரென மிகவும் வேதனை பட்டு தனது பிள்ளைகளை பெற்றெடுப்பார். அந்த நிலைமையில் உங்களை நினைத்துப் பாருங்கள் எவ்வளவு வேதனை இருக்கும் என்று. அதைவிட மோசமான வேதனையை அந்த மக்கள் அனுபவித்து இருக்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை.
சாதி, மதம் இனம் பாகுபாடு மனிதனின் மனதில் விதைத்து அவனை அதற்கானவனாகவே மாற்றியது இந்த சமூகம்.
அவன் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை கூட வாழ அருகதை இல்லை என்று நினைத்தது அந்த சமூகம், நல்ல ஆடை அணிந்தாலும் அதையும் நாங்களே அணிய வேண்டும் என்று சொல்லியது அந்த சமூகம். எளியவர்களை நினைத்து பார்க்க கூட தயாராக இல்லை இந்த சமூகம்.
சாதி எனும் ஒரு வார்த்தை, பலரின் வாழ்க்கையை வீணாக்கி, அவர்களுக்கு துன்பத்தை மட்டுமே கொடுத்தது, அப்படிப்பட்ட இந்த வார்த்தை என்னை பொருத்த வரை தேவையே இல்லை, ஒரு மனிதனை நம்மை போல் சக மனிதனாக நினைத்து பார்த்தாலே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்...
மகர்கள் என்ற பிரிவினர் பற்றியும், அவர்கள் பட்ட துன்பத்தை பற்றியும் இந்த புத்தகத்தை படித்த பின்னரே அறிந்தேன்.
இந்த புத்தகம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு புத்தகம் ஆகும்.
என நிச்சயம் இது எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.
விமர்சனம் செய்தவர்:- வே.மகேஸ்வரன்
வகுப்பு :- 10
பள்ளியின் பெயர் :- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு
புத்தகத்தின் பெயர் :- மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்
புபுத்தகத்தின் ஆசிரியர்:- திவ்யா பிரபு

Comments
Post a Comment