ஒரு தோழனும் 3 நண்பர்களும் :-நூல் அறிமுகம்

சென்னையிலிருந்து டெல்லி நோக்கி பயணிக்கும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்.. மொத்தமாக 34 மணி நேர பயணம்..

அந்த அழகான ரயில் பயணத்திற்கு தயாராகும் 4 நபர்கள் கொண்ட ஒரு குடும்பம்.. குடும்பத் தலைவர் சதுரங்க பலகையோடு பயணிக்கிறார்.. சதுரங்க பலகையில் வரலாற்றில் ஆதி முதல் அந்தம் வரை அவருக்கு அடுத்தபடி...

கதை முழுக்க ஆங்காங்கே இரைந்து கிடக்கிறது சதுரங்க ஆட்டத்தின் முழு நீள வரலாறு.. ஆனாலும் கதையின் விறுவிறுப்பு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை மிஞ்சும் வகையிலேயே உள்ளது...

அந்த பயணத்தில் அந்த சதுரங்க பலகையினால் கிடைத்த நட்புகளும், அந்த நட்புக்களோடு சதுரங்க ஆட்டம் ஆடிக்கொண்டே பேசப்படும் சதுரங்கத்தின் வரலாறும் அருமை..

ஆனாலும் இந்த கதையின் உடைய மையம், அந்த ரயிலில், ஒரு அடிமை போல் வேலை செய்யும், தோழர் என்னும் ஒரு அனாதை சிறுவன் தான்...

தன் வாழ்வில், அந்த நிலையிலும், அந்த ரயில் பயணிகளுக்கு அவனால் கிடைக்கும் உதவிகளும், அந்த உதவியின் பலனாக, அவனுக்கு விழும் அடி, உதைகளும் மனதில் ஆறாத வடுக்கள்...

அந்த சிறுவனின் கதையையும், அவனுடைய காயங்களையும் பார்த்து இக்குடும்பம் அவனுக்கு உதவி செய்ய முன் வருகிறது... அவனை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நபரை சதுரங்க போட்டிக்கு அழைக்கிறார் குடும்ப தலைவர்...

ஆனால் அவனும் அந்த சிறு பையன் தன்னை சதுரங்க போட்டியில் வென்றால் மட்டுமே அவனை விடுவிப்பேன் என கர்ஜனை செய்கின்றார்...

அந்த சிறுவனுக்கோ சதுரங்கம் விளையாடவே தெரியாது... ஒரு பயணம் முடிவதற்குள், சதுரங்கத்தை கற்றுக்கொண்டு, சதுரங்க போட்டியில் வென்று, தன் அடிமை சங்கிலியை உடைத்துக் கொண்டு வெளியில் வருவானா? அந்த தோழர் என்ற அனாதை சிறுவன்... இதுதான் இந்த நாவலின் கதைக்களம்...

இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் பல வரலாற்று பதிவுகள் நிறைந்துள்ளது... அதே சமயத்தில், உண்மையிலேயே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு வண்டி எப்பொழுது புறப்படும்? எந்தெந்த நேரத்தில், எந்த எந்த ஊரில், எவ்வளவு நேரம் நிற்கும் என்ற தகவலும் நிரம்பியுள்ளது...

மேலும் பல ஆங்கில நாவல்களையும் அதன் விமர்சனங்களையும் இந்த நூல் தன்னகத்தை பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு...

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு ஏழை சிறுவனின் அடிமை வாழ்க்கையின் கதை இது..

படியுங்கள்.. உங்கள் பயணத்திலும் ஒரு தோழன் உங்கள் உதவிக்காக காத்திருக்கக்கூடும்....

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
ஆசிரியர் பெயர் :- ஆயிஷா இரா நடராசன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்