வாசிக்காத புத்தகத்தின் வாசனை - நூல் அறிமுகம்

தனக்கு பயன்படும் உயிர்களை மட்டுமே மனிதன் தன்னோடு வைத்துக் கொள்கின்றான்..

மரங்களும் அப்படித்தான்... மரம் வளர்ப்பது என்பது ஒரு காலத்திற்கு பிறகு வெட்டுவதற்கும், அதுவரை அதிலிருந்து கனியையோ அல்லது நிழலையோ அனுபவிப்பதற்கும் மட்டும்தான்...

சுற்றுச்சூழலை பற்றி கொஞ்சம் யோசிக்காத மோசமான விலங்கு மனிதன்...

அப்படிப்பட்ட மனிதக் கூட்டங்களால் மழுங்கடிக்கப்பட்டு, மரம் வெட்டும் தொழிலையே பல வருடங்களாக செய்து வருகின்ற ஒரு கிராமம்.. அதுவும் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் தொழில்....

அந்த தொழிலுக்கு போகும் தன் அப்பாவுடன் உதவிக்கு செல்லும் ஒரு சிறுவன்.... கையில் பொழுதுபோக்குக்காக கொண்டு சென்ற ஒரு ரேடியோ பெட்டி.. அதில் எதர்ச்சையாக ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி....

கேட்டுக்கொண்டே, அப்பா சொன்ன வேலையை செய்து கொண்டிருக்கின்றான் அச்சிறுவன்... கேட்க கேட்க அந்த புத்தகத்தை வாசித்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான்... அந்த புத்தகத்தை அடைவதற்கு இருக்கின்ற வழிகளை யோசிக்கின்றான்...

தன் அப்பா செய்யும் இத்தொழிலை பற்றி மிகவும் கவலைப்படுகின்றான்.. மரங்களினுடைய முக்கியத்துவத்தை உணர்கின்றான்... வாசிக்காத அந்த புத்தகத்தினுடைய வாசனை அந்த சிறுவன் மீது வீசத் தொடங்குகிறது....

ஒரு புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மட்டுமல்ல, அந்த புத்தகத்தின் மீதுள்ள விமர்சனம் கூட மற்றவர்களை மாறச் செய்யும் அல்லது மாற்றச் செய்யும் வல்லமை கொண்டது என்று உரக்கச் சொல்கிறது இப்புத்தகம்...

குறைந்த பக்கத்தில் நிறைந்த தாக்கம்... வாசியுங்கள் இந்த வாசிக்காத புத்தகத்தின் வாசனையை..

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- வாசிக்காத புத்தகத்தின் வாசனை
ஆசிரியர் பெயர் :- கோ.மா.கோ.இளங்கோ

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்