மாகடிகாரம் - புத்தக அறிமுகம்
மூடநம்பிக்கை என்பது நம் அனைவரிடமும் ஏதோ ஒரு ரூபத்தில் மறைந்தோ அல்லது வெளிப்படையாகவோ, இருந்து கொண்டு தான் உள்ளது...என்னதான் நாம் அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இதுதான் உண்மை...
ஏன் ? எதற்கு ? எப்படி ? இந்த மூன்றையும், நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கேட்ட பிறகே, அதனை நம்ப வேண்டும் என்று அறிவியலும் சொல்லுகிறது, நாத்திகமும் சொல்லுகிறது... ஆனால் சில இடங்களில் மட்டும், நாம் இந்த கேள்விகளை கேட்டு விட்டு, பல இடங்களில், கேட்க மறந்து காதால் கேட்பதை அப்படியே நம்பி, செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம், "ஈ அடித்தான் காஃபி" என்பார்களே அதுபோல...
இந்த கதையும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.. தீமன் எனும் ஒரு சிறுவன் தன் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு பயணம் செய்கின்ற போது, தற்செயலாக ஒரு வயதான தாத்தாவை சந்திக்கின்றான், அந்த தாத்தாமூலம், இந்த உலகத்தின் ஒரு முக்கியமான ரகசியத்தை தெரிந்துகொண்டு அதை காக்க வேண்டிய பொறுப்பையும் பெறுகின்றான், கிட்டதட்ட உலகை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ போல...
தனக்கு கிடைத்த பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற, உலகின் பல இடங்களுக்கு பயணப்படுகின்றான்.. அவன் பயணமாக பல நபர்கள் உதவி புரிகின்றனர்..
இறுதியில், அந்த ரகசிய இடத்தை அடைந்து, தன்னுடைய பணியின் இறுதி கட்டத்தை செய்யும் போது, அந்த சிறுவன் செய்த செயல் தான் இந்த புத்தகத்தின் மிகச்சிறந்த செயல்... நிச்சயம் இந்த இடத்திற்காகவே இந்த புத்தகத்தை படித்தாக வேண்டும்.. எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் இந்த இடத்தில் உண்டு, இக்கதை விகடன் விருது பெறுவதற்கு முக்கியமான காரணமாக இந்த இடம் தான் இருந்திருக்கும் என நான் நம்புகிறேன்...
மேலும், அந்தச் சிறுவன் பயணமாகின்ற இடங்களினுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. முக்கியமாக மரியானா அகழி பற்றியும், கடிகாரத்தினுடைய வரலாறு பற்றியும், மோன லோஆ தீவுகள் பற்றியும், அதில் உள்ள எரிமலைகள் பற்றியும், நிறைய தகவல்கள் இந்த புத்தகத்தில் நிரம்பி கிடக்கின்றன...
விழியன் கதை என்றாலே, சிறுவர்கள் படிக்க மிக ஏற்ற சொற்களாகவே அமைந்திருக்கும், இப்புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல...
இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம், கண்டிப்பாக மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வியை கேட்பதற்கான அவசியத்தை உணர்வதுடன்… கேள்வி கேட்கவும் ஆரம்பிப்பார்கள் என்பது நிச்சயம்....
புத்தக அறிமுகம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- மாகடிகாரம்
ஆசிரியர் பெயர்:- விழியன்

Comments
Post a Comment