Posts

Showing posts from March, 2024

புதையல் டைரி - நூல் விமர்சனம்

Image
இக்கதை மிக ஆர்வமாகவும் விசித்திரமாகவும் இருந்தது, அனைத்து புதிர்களுமே மிக ஆர்வமாய் இருந்தது, அப்புத்தகத்தை படிக்க படிக்க நானும் அப்புதிர்களுக்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது அந்த நான்கு நண்பர்களும் ஆரம்பம் முதல் இறுதி வரை புதையலை கண்டுபிடிப்பதில் ஆர்வம் குறையாமல் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கதையை படித்துக் கொண்டிருக்கும் போதே சில புதிர்களுக்கான விடை எனக்குத் தெரிந்தது, புதிர்களை கண்டுபிடிப்பதற்கான சில எளிய வழி முறைகளும் நான் அறிந்து கொண்டேன் எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால் நமக்கு சொந்தமானது ஆனால் நம்மை விட மற்றவர்களை அதை அதிகம் பயன்படுத்துவார்கள் அது என்ன விடை தம்முடைய பெயர் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது இக்கதையில் பிடிக்காத பாகம் என்று எதுவும் இல்லை அனைத்துமே நன்றாக இருந்தது விமர்சனம் செய்தவர்:- ச. தாரணி ஸ்ரீ வகுப்பு:- 8 பள்ளி:- அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு நூலின் பெயர்:- புதையல் டைரி ஆசிரியர் பெயர்:- யெஸ். பாலபாரதி

பிணம் நடந்த மர்மம் - நூல் அறிமுகம்

Image
சிறுவர்களுக்கான மர்ம நாவல் வகையை சேர்ந்த இந்த நூல், வங்க மொழி எழுத்தாளரான திரு சத்யஜித் ரே அவர்களால் எழுதப்பட்டது.. தமிழில் இதை மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார் வி.ப.கணேசன் அவர்கள்.. சத்யஜித் ரே அவர்களுடன் நேரடியாக பழக்கம் கொண்டவர் இவர் என்பதால், இவருடைய மொழிபெயர்ப்பில் மிகுந்த தெளிவு உள்ளது.. மொழிபெயர்ப்பு நூல் போல தெரியாமல், குழந்தைகளுக்கு எழுதப்பட்ட நூல் என்ற சாரம் குறையாமல், அழகாக மொழிபெயர்த்துள்ளார்... பிணம் நடந்த மர்மம் என்னும் இந்த நூல் ஃபெலூடா வரிசை நாவல்களுள் ஒன்று, வங்க மொழியில் இவ்வகை நாவல்கள் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது.. ஃபெலூடா என்பவர், அவருடைய நண்பர்களுடன் ஒரு கொலை முயற்சி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு கிராமத்திற்கு பயணப்படுகின்றார்.. அந்த கிராமம், மிகவும் வித்தியாசமான நடைமுறைகளை கடைபிடித்து வருகின்ற கிராமமாக உள்ளது.. மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள அந்த கிராமத்தில், இவரும், இவருடைய நண்பர்களும் தங்கியிருந்து அந்த கொலை முயற்சி வழக்கை கண்டறிந்தார்களா என்பதே கதையின் மையக்கரு... கொலை முயற்சி நடந்த வீட்டில் உள்ள ஒரு ஜமீன்தார், மின்சாரத்தை தவிர்த்து, ...

நூல் விமர்சனம்

Image
லூசி, இந்த புத்தகத்தில் மனிதர்களின் முன்னோடிகள் குரங்குகளா? ,மனிதர்கள் எவ்வாறு பரிணமித்தனர்? பரிணாமம் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு சரியான விடைகளை இந்த புத்தகத்தில் என்னால் அறிய முடிந்தது. நாமெல்லாம் ஹோமோ சேப்பியன்ஸ், பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் உயிரினங்கள், பூமியின் கால நிலைகளுக்கு தகுந்தவாறு எவ்வாறு நாம் மாற்றம் பெற்றோம் என்ற குறிப்புகள் எனக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டின, இந்த பூமி தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகியிருக்கின்றன, முதல் உயிரி தோன்றி 370 கோடி ஆண்டுகள் ஆகிருக்கின்றன குறிப்பாக மனித முதலிகள் தோன்றி 60லிருந்து 70 லட்சம் வருடங்களே கடந்திருக்கின்றன. இந்த 70 லட்சம் ஆண்டுகளில் வெவ்வேறு விதமான மனித முதலிகள் தோன்றி இருக்கின்றன எடுத்துக்காட்டிற்கு ஹோமோ ஹாபிலைஸ் (Homo Habillis) ஹோமோ எரக்டஸ் (Homo eructus) ஹோமோ நீயண்டர்தாலன்சஸ் (homo neanderthalanses) ஹோமோ சேப்பியன்ஸ் (தற்கால மனிதர்கள்) (homo sapiens)போன்ற வகை முதலிகள் முக்கியமான மனித முதலிகள் எனலாம் மனித முதலிகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து தான் இடம்பெயர்ந்தனர், அதில் நிறைய முதலினங்கள் அழிந்திருக்கலாம், இந்த புத்தகம...

கயிறு - நூல் விமர்சனம்

Image
கயிறு என்ற இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது...இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் கயிறு என்ற ஒரு பொருளை மட்டுமே வைத்து கதை முழுவதும் எழுதி இருந்தது தான்.. ஜாதிய வேறுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தான் இப்புத்தகத்தின் முக்கியமாக நோக்கமாக இருந்தது, செழியன் போலவே எங்கள் பள்ளியிலும் நிறைய மாணவர்கள் கைகளில் பலவண்ண கயிறுகளை கட்டி வருவதும், அதன் நிறங்களை கொண்டு பழகிக் கொள்வதும் நான் நேரடியாக பார்க்கின்ற விஷயங்கள், செழியன் என்ற பையன் அந்த கயிற்றினை கைகளில் கட்டிக் கொண்டதும், பிறகு தன் நட்பு பிரிந்து விடக்கூடாது என்பதற்காக கயிற்றை தன் கையில் இருந்து அவிழ்த்ததும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. எங்கள் பள்ளியிலும் இவ்வாறு நடந்தால் நன்றாக இருக்கும்.. நாம் ஒரு செயல் செய்வதற்கு முன் ஏன்..?எதற்கு..? என்று ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது புத்தகம் உணர்த்தும் பொருளாக நான் புரிந்து கொள்கிறேன்... விமர்சனம் செய்தவர்:- ச.தாரணி ஸ்ரீ வகுப்பு :- 8 பள்ளி:- அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு நூலின் பெயர் :- கயிறு நூலின் ஆசிரியர் :- விஷ்ணு...

குட்டியானை - நூல் விமர்சனம்

Image
குட்டியானை என்ற நூலை எழுதி சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதைத் தொட்டுவிட்டார் எழுத்தாளர் ச.முத்துக்குமாரி அவர்கள், குட்டி யானை புத்தகத்தில் ஏழு கதைகள் உள்ளன, அனைத்து கதைகளுமே நான் சிறுவயதில் என்ன செய்தேனோ அதை நினைவு படுத்துகிறது, இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சிந்திக்கவும், அந்த பிரச்சனைகளுக்கு விடை காணவும், இந்த நூல் வழி வகுக்கிறது நாம் செய்யும் சின்ன குறும்புத்தனங்களையும், அதனால் ஏற்படும் துன்பங்களையும் இந்த கதைகள் நினைவுபடுத்துகின்றன. பள்ளி போகாமல் இருக்க நாம் சொல்லும் பொய்களும், உணவு திங்க திருடுவதும் நான் செய்த குறும்பு தனங்கள், இவை இப்புத்தகத்தின் மூலம் நினைவுக்கு வருகிறது இந்த ஏழு கதைகளிலும், குட்டியானை என்ற கதை எனக்கு விருப்பமான கதை ஆகும். அதில் குட்டியானையிடம் குட்டி முயல் பேச விரும்புவதும், குட்டியானை பேசாமல் தயங்குவதும், கடைசியாக இருவரும் நண்பர்களாவது சுவாரசியமாக இருந்தது. அதில் சில கதைகளுக்கு கேட்ட கேள்விகளும், குறிப்புகளும், பல புதிய செய்திகளை தெரிந்து கொள்ள உதவியது. இந்த குட்டி யானை புத்தகத்தை அனைவரும் படித்துப் பார்க்கலாம் விமர்சித்தவர் பெயர்: சா.ஆஷினி ...

ஆசை அகத்தினையா - நூல் விமர்சனம்

Image
ஆசை அகத்திணையா என்ற இந்த புத்தகத்தில், ஒரு பெண்ணின் மனதின் 64 பக்கங்களை மட்டும் திறந்து காட்டி இருக்கின்றார் கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்கள்.. அதில் 21 ஆம் பக்கத்திலேயே புதைந்து போய்க் கொண்டிருக்கின்றேன் நான்.. "புதைந்து போனதாய் சொன்ன பொருள் ஒன்றை புதுதாய் தேடத் தொடங்கி இருக்கிறான் இப்பொழுது எல்லாம்..." ஆம்... அடிக்கடி ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது ஆணின் வழக்கமல்லவா... புதைந்து போனதாய் சொன்ன பொருள் அவன் இழந்த காதலி.. தேடத் தொடங்கிய கணமோ.. இவள் வந்து இல்லறம் ஆரம்பித்த பிறகு.. ஒரு பெண்ணாய் அவள் நிலை என்ன.. அவள் மனது என்னென்ன பேசும்.. இறுதியாய் அவள் மனது இசைகிறது அவனுக்கு.. "வேறென்றும் தோன்றாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.. தொலைக்கப்பட்ட ஒன்று நிச்சயம் தேடப்படும் தானே..." தொலைக்கப்பட்ட ஒன்று நிச்சயம் தேடப்படும் தானே?- ஆஹா என்ன அருமையான வரிகள்...ஆண் மனதை புரிந்து கொண்ட பெண் அல்லவா.. ஒதுங்கிக் கொள்வாளா..? அல்லது அவள் தேவையை அடாவடியாய் இறுத்திக் கொள்வாளா..? இதோ அடுத்த வரி "புதையுண்ட பொருள்தேடி தோன்றிய புழுதியில் ப...

சோலைமலை இளவரசி-நூல் விமர்சனம்

Image
சுதந்திரப் போராட்டம் என்பதும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை என்பதும், நமக்கெல்லாம் ஒரு இறந்த கால கதையே, இதயத்தில் இரக்கம் உள்ளவர்களால் மட்டுமே அவர்களின் வழியை கொஞ்சம் (கொஞ்சம் மட்டுமே) உணர முடியுமே தவிர, மற்றவர்களுக்கெல்லாம் அது சமூக அறிவியல் பாடத்தில் வருகின்ற வினா விடையே.. அவர்களின் தியாகம் எப்படிப்பட்டது, அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், சிறைக்கு ஒருவன் செல்லும்போது அவனுடைய வலி, சென்ற பிறகு அவனுடைய வலி, சென்று விடுதலையாகி வந்த பிறகு அடைகின்ற பெருவலி இதனை எல்லாம் நம்மால் முழுக்க உணர முடியுமா.. முடியும்... இந்த சோலைமலை இளவரசி நாவலில் நாமும் தேச பக்தன் குமாரலிங்கமாக மாற ஆரம்பிக்கும் போது... கதை முண்ணும் பின்னுமாக, முற்காலத்திலும் இக்காலத்திலும் நடைபெறுவதாக அருமையாக வடிவமைத்துள்ளார் கல்கி அவர்கள்.. ஒரு இடத்தில் கூட புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் முழுவதுமாக படித்து முடித்த பிறகும் பிடித்துக் கொண்டே இருந்தேன் கைகளில்.. புத்தகத்தின் உடைய கடைசி பக்கத்திலே உள்ளது இப்ப புத்தகத்தினுடைய பெயருக்கான பொருத்தமான காரணம்.. மாறலேந்தன் உலகநாத தேவன் தான் குமா...

சரஸ்வதிக்கு என்ன ஆச்சு - விமர்சனம்

Image
முதலில், ஒரு பெண்ணினுடைய வலியையும், மனக்கஷ்டத்தையும் பற்றி எழுதியதற்கு, ஒரு பெண்ணாய் என் நன்றியை சொல்லி இவ்விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன் ஒரு பெண்ணிற்கு, பல கனவுகளும் ஆசைகளும் உள்ளது. ஆனால், அதை தடுக்கும் விதமான இயற்கை தந்த பரிசும் உள்ளது, மாதத்தில் ஐந்து நாட்கள் ஒரு பெண் அவதிப்படும் வலி எனக்கு தெரியும். அதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடைய வலியையும் பற்றி எனக்கு தெரியும். இது மட்டும் தான் தெரியும் ஆனால் இதைவிட கொடூர செயல்களும் உள்ளது என இப்புத்தகத்தைப் பற்றி படித்தவுடன் தெரிந்து கொண்டேன். இன்றும் அதிக பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாத நிலை உள்ளது. ஆனால் அதை பார்க்க சுலபமாக தெரியும், ஆனால் அங்கு இருந்து பார்த்தால் தான் அதனுடைய வலி தெரியும். சில ஊரில், இன்னும் பல கட்சியை தொடங்கி, இது செய்கிறோம் அது செய்கிறோம் என்று சொல்லி, எதிர் எதிர் கட்சியினர் சண்டையை போடுறாங்க, அதை நம்பி மக்களும் ஓட்டு போடுறாங்க. அவங்களுடைய சண்டையால ஒரு ஊரோட பாதுகாப்பும் கெட்டுப் போகிறது. அதனால எத்தனையோ உயிர் கூட போய் இருக்கு. பெற்றோர் மட்டுமே தன்னுடைய பிள்ளைகளின் கஷ்டத்தை தீர்க்க முடியும். என்பதற்கு இக்கதை...

மாகடிகாரம் - விமர்சனம்

Image
மாகடிகாரம் என்னும் புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது, இதில் வரும் தீமன் என்ற பெயரும் வித்தியாசமானது, இது இரண்டையும் மையமாகக் கொண்டு ஒரு வித்தியாசமான கதையை எழுதியுள்ளார் விழியன் அவர்கள் இந்தக் கதையில் வருகின்ற பல இடங்கள் உண்மையில் எனக்கு இதுவரை தெரியாத இடங்கள், இந்த புத்தகத்தின் மூலமே நான் இந்த இடங்களை அறிந்து கொண்டேன், இந்த உலகமே இயங்குவதற்கு காரணம் மாகடிகாரம் என்ற நம்பிக்கையை உடைத்தான் தீமன்,கதையின் இறுதி பக்கங்களைப் படிக்கும் போது ஆரம்பத்தில் இருந்ததுக்கும், பின் இருந்ததற்கும், பல மாற்றங்கள். ஆழ்கடல் முதல் உயரமான மலை வரை உள்ளடக்கிய ஒரு கதை, இறுதியில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க கூட இயலாத வகையில் பல மாற்றங்கள் இருந்தன, ஏலகிரி சென்ற தீமன் எதார்த்தமாய் சந்தித்த ஒரு தாத்தா, அவர் கூறிய சுவாரசியமான கதை, அதன் மூலம் தொடங்கிய பயணம்.. அதன் பின் நடந்தவையே இந்தக் கதையாக மாறியது ஹெர்குலஸ், மடாகஸ் போன்ற பலரும் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல், முன்னோர்கள் சொன்னதை கேட்டு அது படியே நடந்தனர், ஆனால் தீமன் மட்டும் ஏன்..? எதற்கு..? என்று கேள்விகளை எழுப்பி ஆராயச் செய்தான்… ...

செவ்விந்தியக் கழுகு - விமர்சனம்

Image
எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது, செவ்விந்தியர்கள் பற்றிய செய்திகள் நிறைய எனக்கு தெரிந்தது, பறவைகள் பற்றிய செய்தியும் எனக்கு நிறைய தெரிந்தது, இக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது, கழுகு பற்றிய செய்தி நிறைய தெரிந்தது, அனைத்து செய்திகளும் விசித்திரமாக இருந்தது, எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்தது பறவைகள் தனக்கு ஏற்ற சிறகுகளை பொருத்திக் கொண்ட கதை, பறவைகள் ஒவ்வொன்றின் படைப்பு அவற்றின் வாழ்க்கை முறையும் மிகவும் சுவாரசியமாக இருந்தது, செவ்விந்திய பெண் மருத்துவம் கற்றுக் கொண்ட கதை மிகவும் பிடித்திருந்தது.. இக்கதையில் பிடிக்காத பாகம் என்று எதுவும் இல்லை அனைத்துமே மிகவும் விசித்திரமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது விமர்சனம் செய்தவர்:- ச.தாரணி ஸ்ரீ வகுப்பு :- 8 பள்ளியின் பெயர்:- அரசினர் மேல்நிலைப்பள்ளி, கழுகுப்புலிக்காடு புத்தகத்தின் பெயர் :- செவ்விந்தியக் கழுகு ஆசிரியர் பெயர் :- மேபல் பவர்ஸ் ( தமிழில் :- சரவணன் பார்த்தசாரதி)

செவ்விந்தியக் கழுகு - நூல் அறிமுகம்

Image
மனிதன் தோன்றிய காலம் முதல் ஏன்..? எவ்வாறு..? என்ற கேள்விகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் இந்த கேள்விகளுக்கு, கற்பனா சக்தியின் மூலம் கட்டுக்கதைகளாக பல பதில்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன... மிக முக்கியமாக இயற்கையின் செயல்பாடுகளுக்கு, மனிதர்கள் கட்டமைத்த கட்டுக்கதைகள் கடவுளாகி, விதிகளாகி, மதங்களாகி, ஆலமரம் போல் எங்கும் பரவி வந்தாலும்... அறிவியல் ஆய்வுகள் இவற்றை மூட நம்பிக்கைகள் என்று நிரூபித்துக் கொண்டே தான் இருக்கின்றன... ஆனாலும் இவற்றில் சில கதைகள் அல்லது பதில்கள் ரசிக்கும் படியாக அமைந்து விடுகின்றன.. இது உலகில் அனைத்து இடங்களிலும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கூற்றாகவே உள்ளது... ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் அடிமைப்படுத்துவதற்கு முன்பு அமெரிக்காவில் நவயோ, அப்பாசே, ஷியானி, யகாமா, ஷோஷோன், ஈரோக்வா போன்ற செவிந்திய இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் தான் வாழ்ந்து வந்தனர்.. இவர்களில் ஈரோக்வா இன மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சார்ந்த ஏழு கதைகளை தான் இந்நூல் நமக்கு கூறுகிறது.. நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு "இடத்தை கொடுத்தால் மடத்தை கேட்பானாம...

உயிருடன் எரிக்கப்பட்ட புரூனோ - நூல் அறிமுகம்

Image
உலகம் முழுவதிலும் பல வகையான மதங்களும், அதில் பலவகையான கடவுள்களும் இருக்கின்றனர்... இவைகளில் பல வேற்றுமைகள் இருந்தாலும், அனைத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை மூடநம்பிக்கை.. கண்மூடித்தனமாக, கேட்டதை அப்படியே நம்பும் மூடர் கூட்டம் தான் மதங்களின் அடிநாதம்... எதிர்த்து வரும் ஒற்றைக் கேள்வி மதங்களின் ஆணிவேரையே ஆட்டி விடுகிறது... அந்தக் கேள்விக்கு சரியான பதில் அவர்களிடம் இல்லாத போது, தன் இயலாமை, கோபமாய் மாறி, இவன் கடவுளை எதிர்த்து கேள்வி கேட்கின்றான், இவன் நமக்கு எதிரானவன், இவன் நரகத்தின் வாசல், இவன் இங்கு இருக்க வேண்டியவன் அல்ல என ஏதேதோ கூறி, எதிர் கேள்வி கேட்டவனை மற்றவர்களைப் போலவே அடக்கி ஒடுக்க பார்க்கின்றார்கள்.. பலர் மிரட்டலுக்கு பணிகின்றனர்.. வெகுசிலர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாடி தன் உயிர் துறக்கின்றனர்... அப்படி ஒரு மாமனிதன்தான் புரூனோ... இங்கிலாந்தில் பிறக்கும் இவர், முதலில் அவர் தந்தையை போலவே மத போதகராக மாறுகின்றார்.. பின்னர் தன்னுடைய பகுத்தறிவினால் மதங்கள் கூறும் பல கருத்துக்களுக்கு எதிராக நிற்கின்றார்.. தன் வாழ்நாள் முழுக்க, வெவ்வேறு நாடுகளுக்கு ஓடி ஒளிந்து வா...

பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் - நூல் அறிமுகம்

Image
வங்க மொழி எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட சத்யஜித் ரே அவர்களின், ஃபெலூடா கதை வரிசைகள் மிகவும் புகழ்பெற்றவை, அவற்றில் ஒன்றுதான் பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்... குழந்தைகளுக்கான துப்பறியும் நாவல் வகமையைக் கொண்ட இந்நாவலை தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் வி.பா.கணேசன் அவர்கள்.. ஃபெலூடா என்பவர் ஒரு மிகச் சிறந்த புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர், தமது திறமைக்கேற்ற, சவாலான துப்பறியும் பணி கிடைக்காமல், சிறிது நாட்களாக அன்றாட அலுவல்களை மேற்கொண்டு இருக்கிறார்.. லால்மோகன் சிறந்த துப்பறியும் நாவல்களை எழுதுபவர், அடுத்த நாவலுக்கு கதை கிடைக்காமல், ஃபெலுடாவை சந்திக்க வருகிறார்.. இவர்கள் இருவரும் வாரணாசி சென்று சில நாட்களை கழிக்க முடிவு செய்கின்றனர், அவர்களோடு தபேஷ் என்பவரும் இணைந்து கொள்கிறார்... இவர்கள் மூவரும் வாரணாசியில் சந்தித்த நபர்கள்.. அங்கு கிடைக்கும் ஒரு துப்பறியும் பணி... அதனால் பெலூடாவுக்கு வந்த சவால்கள்.. இறுதியில் காணாமல் போன அந்தப் பிள்ளையார் சிலை கிடைத்ததா இல்லையா என விறுவிறுப்பாக, பல திருப்பங்களோடு நகர்கிறது இந்தக் கதை... இந்த கதையில் ருத்ரா என்ற ஒ...

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்