நூல் விமர்சனம்



லூசி, இந்த புத்தகத்தில் மனிதர்களின் முன்னோடிகள் குரங்குகளா? ,மனிதர்கள் எவ்வாறு பரிணமித்தனர்? பரிணாமம் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு சரியான விடைகளை இந்த புத்தகத்தில் என்னால் அறிய முடிந்தது.

நாமெல்லாம் ஹோமோ சேப்பியன்ஸ், பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் உயிரினங்கள், பூமியின் கால நிலைகளுக்கு தகுந்தவாறு எவ்வாறு நாம் மாற்றம் பெற்றோம் என்ற குறிப்புகள் எனக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டின,

இந்த பூமி தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகியிருக்கின்றன, முதல் உயிரி தோன்றி 370 கோடி ஆண்டுகள் ஆகிருக்கின்றன குறிப்பாக மனித முதலிகள் தோன்றி 60லிருந்து 70 லட்சம் வருடங்களே கடந்திருக்கின்றன. இந்த 70 லட்சம் ஆண்டுகளில் வெவ்வேறு விதமான மனித முதலிகள் தோன்றி இருக்கின்றன

எடுத்துக்காட்டிற்கு ஹோமோ ஹாபிலைஸ் (Homo Habillis) ஹோமோ எரக்டஸ் (Homo eructus) ஹோமோ நீயண்டர்தாலன்சஸ் (homo neanderthalanses) ஹோமோ சேப்பியன்ஸ் (தற்கால மனிதர்கள்) (homo sapiens)போன்ற வகை முதலிகள் முக்கியமான மனித முதலிகள் எனலாம்

மனித முதலிகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து தான் இடம்பெயர்ந்தனர், அதில் நிறைய முதலினங்கள் அழிந்திருக்கலாம், இந்த புத்தகம் எனக்கு பல ஆச்சரியங்களையும் வியப்பையும் எழுப்பின

மனிதனின் பரிணாம வளர்ச்சி, பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கம் போன்ற நிறைய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது, ஆதலால் மனிதனின் வரலாற்றை அறிய விரும்புவோர்களுக்கு சரியான நல்ல புத்தகமாக இது அமையும் என நான் நம்புகிறேன். விமர்சிப்பவர் :- R.B.விஷ்வா
வகுப்பு‌ :- 9
பள்ளி :- அரசு மேல்நிலைப்பள்ளி கழுகுப்புலிக்காடு

புத்தகத்தின் பெயர்: லூசி
எழுதியவர் : சி.ராமலிங்கம்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்