புதையல் டைரி - நூல் விமர்சனம்



இக்கதை மிக ஆர்வமாகவும் விசித்திரமாகவும் இருந்தது, அனைத்து புதிர்களுமே மிக ஆர்வமாய் இருந்தது, அப்புத்தகத்தை படிக்க படிக்க நானும் அப்புதிர்களுக்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது

அந்த நான்கு நண்பர்களும் ஆரம்பம் முதல் இறுதி வரை புதையலை கண்டுபிடிப்பதில் ஆர்வம் குறையாமல் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கதையை படித்துக் கொண்டிருக்கும் போதே சில புதிர்களுக்கான விடை எனக்குத் தெரிந்தது, புதிர்களை கண்டுபிடிப்பதற்கான சில எளிய வழி முறைகளும் நான் அறிந்து கொண்டேன்

எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால் நமக்கு சொந்தமானது ஆனால் நம்மை விட மற்றவர்களை அதை அதிகம் பயன்படுத்துவார்கள் அது என்ன விடை தம்முடைய பெயர் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது இக்கதையில் பிடிக்காத பாகம் என்று எதுவும் இல்லை அனைத்துமே நன்றாக இருந்தது

விமர்சனம் செய்தவர்:- ச. தாரணி ஸ்ரீ
வகுப்பு:- 8
பள்ளி:- அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு

நூலின் பெயர்:- புதையல் டைரி
ஆசிரியர் பெயர்:- யெஸ். பாலபாரதி


Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்