குட்டியானை - நூல் விமர்சனம்
குட்டியானை என்ற நூலை எழுதி சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதைத் தொட்டுவிட்டார் எழுத்தாளர் ச.முத்துக்குமாரி அவர்கள்,
குட்டி யானை புத்தகத்தில் ஏழு கதைகள் உள்ளன, அனைத்து கதைகளுமே நான் சிறுவயதில் என்ன செய்தேனோ அதை நினைவு படுத்துகிறது, இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சிந்திக்கவும், அந்த பிரச்சனைகளுக்கு விடை காணவும், இந்த நூல் வழி வகுக்கிறது
நாம் செய்யும் சின்ன குறும்புத்தனங்களையும், அதனால் ஏற்படும் துன்பங்களையும் இந்த கதைகள் நினைவுபடுத்துகின்றன. பள்ளி போகாமல் இருக்க நாம் சொல்லும் பொய்களும், உணவு திங்க திருடுவதும் நான் செய்த குறும்பு தனங்கள், இவை இப்புத்தகத்தின் மூலம் நினைவுக்கு வருகிறது
இந்த ஏழு கதைகளிலும், குட்டியானை என்ற கதை எனக்கு விருப்பமான கதை ஆகும். அதில் குட்டியானையிடம் குட்டி முயல் பேச விரும்புவதும், குட்டியானை பேசாமல் தயங்குவதும், கடைசியாக இருவரும் நண்பர்களாவது சுவாரசியமாக இருந்தது. அதில் சில கதைகளுக்கு கேட்ட கேள்விகளும், குறிப்புகளும், பல புதிய செய்திகளை தெரிந்து கொள்ள உதவியது. இந்த குட்டி யானை புத்தகத்தை அனைவரும் படித்துப் பார்க்கலாம்
விமர்சித்தவர் பெயர்: சா.ஆஷினி
வகுப்பு: 9
பள்ளி :- அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு
புத்தகத்தின் பெயர் :- குட்டியானை
ஆசிரியர் பெயர் :- ச.முத்துக்குமாரி

Comments
Post a Comment