கயிறு - நூல் விமர்சனம்
கயிறு என்ற இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது...இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் கயிறு என்ற ஒரு பொருளை மட்டுமே வைத்து கதை முழுவதும் எழுதி இருந்தது தான்..
ஜாதிய வேறுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தான் இப்புத்தகத்தின் முக்கியமாக நோக்கமாக இருந்தது, செழியன் போலவே எங்கள் பள்ளியிலும் நிறைய மாணவர்கள் கைகளில் பலவண்ண கயிறுகளை கட்டி வருவதும், அதன் நிறங்களை கொண்டு பழகிக் கொள்வதும் நான் நேரடியாக பார்க்கின்ற விஷயங்கள்,
செழியன் என்ற பையன் அந்த கயிற்றினை கைகளில் கட்டிக் கொண்டதும், பிறகு தன் நட்பு பிரிந்து விடக்கூடாது என்பதற்காக கயிற்றை தன் கையில் இருந்து அவிழ்த்ததும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. எங்கள் பள்ளியிலும் இவ்வாறு நடந்தால் நன்றாக இருக்கும்..
நாம் ஒரு செயல் செய்வதற்கு முன் ஏன்..?எதற்கு..? என்று ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது புத்தகம் உணர்த்தும் பொருளாக நான் புரிந்து கொள்கிறேன்...
விமர்சனம் செய்தவர்:- ச.தாரணி ஸ்ரீ
வகுப்பு :- 8
பள்ளி:- அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு
நூலின் பெயர் :- கயிறு
நூலின் ஆசிரியர் :- விஷ்ணுபுரம் சரவணன்

Comments
Post a Comment