சரஸ்வதிக்கு என்ன ஆச்சு - விமர்சனம்
முதலில், ஒரு பெண்ணினுடைய வலியையும், மனக்கஷ்டத்தையும் பற்றி எழுதியதற்கு, ஒரு பெண்ணாய் என் நன்றியை சொல்லி இவ்விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்
ஒரு பெண்ணிற்கு, பல கனவுகளும் ஆசைகளும் உள்ளது. ஆனால், அதை தடுக்கும் விதமான இயற்கை தந்த பரிசும் உள்ளது, மாதத்தில் ஐந்து நாட்கள் ஒரு பெண் அவதிப்படும் வலி எனக்கு தெரியும். அதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடைய வலியையும் பற்றி எனக்கு தெரியும். இது மட்டும் தான் தெரியும் ஆனால் இதைவிட கொடூர செயல்களும் உள்ளது என இப்புத்தகத்தைப் பற்றி படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.
இன்றும் அதிக பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாத நிலை உள்ளது. ஆனால் அதை பார்க்க சுலபமாக தெரியும், ஆனால் அங்கு இருந்து பார்த்தால் தான் அதனுடைய வலி தெரியும்.
சில ஊரில், இன்னும் பல கட்சியை தொடங்கி, இது செய்கிறோம் அது செய்கிறோம் என்று சொல்லி, எதிர் எதிர் கட்சியினர் சண்டையை போடுறாங்க, அதை நம்பி மக்களும் ஓட்டு போடுறாங்க. அவங்களுடைய சண்டையால ஒரு ஊரோட பாதுகாப்பும் கெட்டுப் போகிறது. அதனால எத்தனையோ உயிர் கூட போய் இருக்கு.
பெற்றோர் மட்டுமே தன்னுடைய பிள்ளைகளின் கஷ்டத்தை தீர்க்க முடியும். என்பதற்கு இக்கதை முன்னுதாரணம்.
இந்தக் கதையில் எனக்கு பிடித்த வரி இதுவும் ஒன்னு "ஒரு முட்டையை உடைத்து வெளியே வரும் குஞ்சு தான் பெரிய பறவையாக மாறும். முட்டைக் குள்ளே இருந்தால் இறந்து போகும்" இக்கதைக்கேற்ற வரியாக உள்ளது.
விமர்சனம் செய்தவர் :- ச.சௌந்தர்யா தேவி
வகுப்பு:- 10
படிக்கும் பள்ளி:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைக்கோட்டைக்காடு.
நூலின் பெயர்:- சரஸ்வதிக்கு என்ன ஆச்சு ? ஆசிரியர் பெயர்:- சரிதா ஜோ

 
 
 
Comments
Post a Comment