Posts

Showing posts from June, 2024

ஏழு தலைமுறைகள் - நூல் விமர்சனம்

Image
இப்புத்தகம் ஒரு உண்மையான கதையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது, அத்தோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான மற்றும் ஆர்வமூட்டும் புத்தகம், அமெரிக்காவில் உள்ள கருப்பர்களின் நிலையையும் அவர்களின் முன்னேற்றத்தையும், ஆங்கிலேயர்களின் மனிதத் தன்மையற்ற செயல்கள் மற்றும் வரட்டு கௌரத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வரலாற்றை ஏன்? தெரிந்து கொள்ள வேண்டுமென்ற கேள்விக்கு இந்த புத்தகமே பதிலாகும் இதனைப் படித்த பிறகு என் இனம் எது? நான் யார்? என் வரலாற்று என்னவென்று என்னைத் தேட வைத்துள்ளது இப் புத்தகம். முதலில் எல்லாக் கதைகள் போல் இருந்தாலும் பக்கங்கள் நகர நகர விறுவிறுப்பையும்.. இறுதியில் எதிர்பாராதத் திருப்பத்தைக் கொண்டுள்ளது... ஆப்பிரிக்கா நாட்டின் கருப்பர்களின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துக் கொண்டது வியப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. அவர்களின் குழந்தைக்கு பெயர் வைப்பது, ஆண்களுக்கான தேர்வு...... என எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் உங்களுக்கு என்ன வேலை! படியுங்கள்! நாம் அனைவரும் படித்து அறிந்து புரிந்து தெரிந்து நடந்துக் கொள்ள வேண்டிய புத்தகம். இதனைப் படிப்பதன் மூலம் நம் எவ்வள...

100 நாற்காலிகள் - நூல் விமர்சனம்

Image
இன்று நான் படித்த புத்தகத்தின் பெயர் 100 நாற்காலிகள், இக்கதையை எழுதியவர் ஜெயமோகன் அவர்கள் குறவன் குறத்திப் பழங்குடியினம் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நாயாடி என்று ஒரு பழங்குடியினம் இருப்பதை நான் இந்த புத்தகத்தில் படித்த பின் தான் தெரிந்து கொண்டேன், இவர்களின் வாழ்க்கை முறையைப் படித்த பின்பு என் இதயம் படபடத்து விட்டது பிரஜானந்தர் உன் அம்மாவை பார்த்துக் கொள் என்று சொன்ன பின் தான் எனக்கு அம்மா இருக்கிறார் என உணர்ந்தான் என நான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தை விவரம் வந்தவர்கள் அதாவது பெரியவர்கள் மேல் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் படிப்பது நல்லது. இந்த புத்தகத்தின் மூலம் நான் புரிந்து கொண்டது எந்த சூழ்நிலையிலும் நம் அப்பா அம்மாவை விளங்கி வைக்கவோ, துரத்தவோ, மறக்கவோ கூடாது என இக்கதை எனக்கு உணர்த்தியது மேலும் எதுவும் நிரந்தரம் அல்ல இந்த புத்தகத்தை நான் படித்த போது என் கண்களை கலங்கடித்தது இக்கதையில் நான் நினைத்து பதரியது, பயந்தது எல்லாம் நாயாடி பழங்குடியின் மக்களை நினைத்து தான். இது போலவும் இன்னும் மக்கள் உயிர் வாழ்கிறார்களா? என்று என்னை யோசிக்க வைத்த முதல் ...

தண்ணீர் தேசம் - நூல் அறிமுகம்

Image
இது கவிதை புத்தகமா? கதை புத்தகமா? அல்லது விஞ்ஞான அதிசய குறிப்பு புத்தகமா? என என்னால் இன்னும் கூட பிரித்தறிய இயலவில்லை. ஆனால் என்னை அதிசயத்தில் ஆழ்த்திய மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் என்றால் அது மிகையாகாது நீண்டு பறந்த நீலக்கடல், அதன் மீது அச்சம் கொண்ட ஒரு மங்கை, மங்கையின் அச்சத்தின் மீது அச்சம் கொண்ட ஒரு காதலன், காதலனின் அச்சமில்லா வாழ்க்கை பார்த்து அச்சம் கொண்ட மங்கையின் தந்தை, மீனவ நண்பர்கள் ஒரு நான்கு பேர் என மிகக் குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு நகர்கிறது இந்த கதை... வாழ்க்கையின் அத்துனை கேள்விகளுக்கும், கிட்டத்தட்ட அதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி, சூழ்நிலைக்கு தகுந்த பதிலை கொடுத்து விடை அளித்திருக்கிறார் வைரமுத்து... புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் வைரமாய் மிளிர்கிறது.. காதல் எனும் உணர்வுக்குள் எளிதாய் நுழைந்து விடலாம், ஆனால், அதன் அடுத்த கட்டமான திருமணம் எனும் உறவுக்கு நகரத்தான் எக்கச்சக்கமான மனப்போராட்டங்களை கடக்க வேண்டியுள்ளது... ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய நடைமுறை வாழ்க்கையினை, தன்னுடைய சுபாவத்தினை, ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்...

பாஸ்தான் பெயில்.. பெயில் தான் பாஸ் - நூல் அறிமுகம்

Image
கல்வி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? நாம் செல்லும் பாதை சரியான பாதைதானா? மாணவர்கள் உற்பத்தி பொருட்களா? என பல கேள்விகளை 13 கட்டுரைகளில் அலசுகிறது இப்புத்தகம்... மெக்காலே முதல் கஸ்தூரி ரங்கன் வரை உள்ள அனைத்து கல்விக் கொள்கைகளின் நன்மை தீமைகளை அலசி.. உலகின் முதன்மையான கல்வி வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளின் கல்விக் கொள்கையுடனும், கல்வி முறையுடனும் ஒப்பிட்டு, நாம் கல்வியில், கல்விக் கொள்கைகளில் எந்த இடத்தில் நிற்கிறோம் என கண்முன் காட்டுகிறது இப் புத்தகம்... பெரிய பெரிய கம்பெனிகளுக்கு தொழிலாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் கல்வி முறையில், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல், ஆசிரியர் பயிற்று நிறுவனங்கள் காற்று வாங்குகின்றன என கண்ணீரோடு கூறும் கட்டுரை சிறப்பு.. அயல்நாடுகளில் (கியூபா) ஆசிரியராய் பணிபுரிய என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்! என்னென்ன செய்ய வேண்டும்! அதனால் அவர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள்! என்பதை அறியும்போது, நாம் செய்து கொண்டிருக்கும் செயலுடன் ஒப்பிட்டு பார்த்து, நம் தரத்தையும், பதம் பார்த்துக் கொள்ள முடிகிறது.... பரிட்சைக்கு வருகின்ற புத...

வாசிப்பது எப்படி? - நூல் அறிமுகம்

Image
வாசிப்பது எப்படி?-என்ற தலைப்பை பார்த்ததும், ஒரு புத்தகத்தை எப்படி எல்லாம் வாசிக்கலாம்? வாசிக்க வேண்டும், விரைவாய் புத்தகத்தை வாசிக்க என்ன வழி? போன்ற தகவல்கள் இருக்கும் என நினைத்தேன். ஆனால், தற்பொழுது புத்தக வாசிப்பில் உள்ள பிரச்சனைகளையும், புத்தக வாசிப்பால் அடையும் பயன்களையும் மிக ஆழமாகவே பேசி உள்ளார் செல்வேந்திரன்.... தற்பொழுது வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என அவர் மன வேதனையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் ஒரு ஆசிரியராய் நாம் அனைவரும் தினந்தோறும் சந்தித்து வரும் சவால்களின் பிரதிபளிப்பாய் உள்ளது.. எது உண்மையான சமூக இழிவு என்னும் தலைப்பில் இவர் கேட்ட கேள்விகளும் இறுதியாய் அனைத்து சமூக இழிவுக்கும் காரணம் வாசிப்பற்ற நிலையே எனக் கூறி வாசிக்காமல் இருப்பதே உண்மையான சமூக இழிவு என உணர வைத்திருப்பது அருமை... ஏன் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் இறுதியாக "கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் ராசா" என முடித்திருப்பது அழகு ட்ரெண்டிங்னா என்ன? என்னும் தலைப்பு கண்டிப்பாக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவர்களை...

அருவியில் குளித்த ஐஸ் (தாம்போய் கதைகள்) - நூல் அறிமுகம்

Image
பள்ளிக் குழந்தைகளால், அவர்களின் கற்பனையில் எழுந்த கதைகளினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இவ்வுத்தகம்... கதைகளுக்கே உரிய எந்த விதிமுறையும் இவர்களுக்கு இல்லை, இவர்களினுடைய கற்பனைகளுக்கு எல்லை இல்லை, ஆயினும் இவர்களுடைய கதைகள் ரசிக்கும்படியாகவே இருந்தது... ஒரு கதையின் அடுத்த கட்டத்தை என்னால் யூகிக்கவே முடியவில்லை அவர்களினுடைய கற்பனைப் போக்கு மிகவும் வித்தியாசமாக உள்ளது... உதாரணமாக ஒரு ஊரில் ஒரு அரசன், அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகளாம், வறுமையின் காரணமாக, தங்கையின் திருமணத்திற்காக நான்கு மகன்களும் வேலைக்கு போகிறார்களாம்,  நாட்டுக்கே அரசன், அவர்களுடைய மகன்கள் இளவரசர்கள் தங்களுடைய தங்கையின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் வேலைக்கு போகிறார்களா? இது என்ன? என்ற கேள்விக்கெல்லாம் இங்கு தேவையில்லை... சொல்லப்போனால் இவர்கள் கதை சொல்லும் விதத்தில் அந்த கேள்வி எல்லாம் எழவே இல்லை... சில கதைகள் நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை போலவே உள்ளது. ஆனால், அந்த கதை நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை போல் முடிவதில்லை, முடியும் இடத்தில் புதிதாய் துவங்குகிறது, புதிய புதிய கோணத்தில் திரும்புகிறது, இறுதியில் முடியும் போத...

நம்பர் பூதம் - நூல் அறிமுகம்

Image
இதுதான் நான் படிக்கும் முதல் கணித நாவல்... ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆயிஷா.இரா.நடராசன்.. மொழிபெயர்ப்பு நூல்களை படிக்கும்போது மனம் ஏனோ அதனுடன் ஒன்ற மறுக்கிறது அல்லது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல... ஆயினும் சில பக்கங்களை கடந்த பிறகு, நானும் டேவிட் கதாபாத்திரத்துடன் ஒன்றி, கனவு பூதத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.. டேவிட் ஒரு சிறுவன் கணிதத்தையும், கணித ஆசிரியரையும் கண்டு அஞ்சுபவன். அவன் கனவில் ஒரு பூதம், அதிலும் கணித பூதம்.. கணிதத்தையும், கணித ஆசிரியரையும் ஒரு பூதத்தைப் போல பார்த்து பயப்படும் டேவிட்... ஒரு கணித பூதத்தை ஆசிரியராக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இரவும் அந்த பூத்ததுக்காக காத்திருக்க வைத்திருக்கும் கதைக்களம் அருமை... 12 இரவுகள், 12 கனவுகள், 12 கணித பாடம் ஆனால் வகுப்பறையில் நடத்தும் நிகழ்வு போல் இல்லாமல், புதுமையாய், எளிமையாய், டேவிட்டுக்கு புரியும்படி, நமக்கும் ஆர்வம் அதிகரிக்கும்படி கொண்டு சென்று இருப்பது அருமை... கணிதத்தில் எண்களோடு விளையாடுவது எவ்வளவு மகிழ்ச்சியையும், வியப்பையும் உண்டாக...

கரும்பலகையில் எழுதாதவை - நூல் அறிமுகம்

Image
இவர் கவிதை எழுதவில்லை, பல கருத்துள்ள விதைகளை என்னுள் விதைத்து சென்றுள்ளார். படிப்பவர் யாராக இருந்தாலும், அவர் நெஞ்சிலும் இந்த விதைகள் நிச்சயம் முட்டி முளைத்து விடும் அற்புத உயிர் உள்ள விதைகள் இக்கவிதைகள்.. இப்புத்தகத்திலுள்ள 45 கவிதைகளை படித்து முடிப்பதற்கு ஓரிரு மணி துளிகள் போதும், இப்படித்தான் படித்தும் முடித்தேன். ஆனால், இந்த புத்தகத்தின் பாதிப்பிலிருந்து வெளியில் வர ஒரு யுகம் போதாது, வெளியில் வர விரும்பவும் இல்லை! ஆசிரியர் போட்டிருக்கும் சட்டையில், இறந்த தன் அப்பாவின் முகம் பார்க்கும் குழந்தை அதிகமாகவே என்னை யோசிக்க வைத்தது.. இயற்கை உபாதைக்கு முதலில் அனுமதி கேட்பவனை அனுமதித்துவிட்டு, பின் தொடர்பவனை அதட்டும் ஆசிரியர்களில் நானும் ஒருவன்.. அக்கவிதை என் தலையிலும் ஒரு கொட்டு கொட்டியது... குழந்தைகள் உறவை வேரறுப்பதில்லை, காய் விடுதலோடு முடித்துக் கொள்கிறார்கள், பழம் விடுவதற்கு ஏதுவாக - என்ற கவிதையில் ஆழப் புதைந்து போனேன்..  அம்மா தினமும் அடிக்கிறாங்க, அப்பாவை கொன்றது என் ஜாதகம் தானாம் - என அழும் குழந்தைக்கு, ஆறுதல் சொல்ல முடியாமல், உன் அம்மா ஜாதகம் என்ன வேடிக்கை பார்த்ததா? எனக் ...

எது நல்ல பள்ளி - நூல் அறிமுகம்

Image
எது நல்ல பள்ளி? என்று வினா வடிவிலேயே புத்தகத்தின் தலைப்பினை கொடுத்து புத்தகத்தினை திறப்பதற்கு முன்பாகவே சிந்திக்க வைத்து விடுகிறார் த.பரசுராமன். அரசு பள்ளியா?, தனியார் பள்ளியா? என்கிற போட்டிகளில் எல்லாம் சிக்காமல் தனது போக்கில் உரையாடல் வடிவில் புத்தகம் மூலம் நம்மிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார், இதில் நிச்சயமாக வெற்றி பெற்றது அவரே.... அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ இந்த 16 விஷயங்கள் இருந்தால் அது நல்ல பள்ளி என கூறி ஒரு 16 விஷயங்களை பட்டியலிடுகிறார் இதற்கு மேல் ஏதேனும் விடுபட்டால் அதனையும் சேர்த்துக் கொள்ள சொல்கிறார் தன்னடக்கத்தோடு... எது நல்ல பள்ளி என்பதற்கு பதினாறு கருத்துகள்.  1) தாய்மொழி கல்வி 2) ஆசிரியர் மாணவர் விகிதம் 3) இப்படிப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள் 4) தண்டனைகள் 5) ஒட்டுமொத்த வளர்ச்சி 6) நூலக, ஆய்வக பயன்பாடு 7) ஆங்கிலத்தை கண்டு மிரளாமல் கற்று தரும் விதம் 8) மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனி கவனம் 9) எழுதியதற்கு மதிப்பெண்ணா? அல்லது புரிந்து கொண்டதற்கு மதிப்பெண்ணா? 10) திறன்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை 11) செயல்வழி கல்வி 12) குழு கற்...

போயிட்டு வாங்க சார் - நூல் அறிமுகம்

Image
போயிட்டு வாங்க சார்... ஒரு ஆசிரியரின் வாழ்க்கை அனுபவம்... சிப்பிங் பணி ஓய்வு பெற்ற பிறகு.... நீண்டு, எங்கும் நிறைந்து கிடக்கும் தனிமையில், அவர் அசைபோடும் அனுபவங்கள் நம்மை அசைய வைக்கின்றது....ஒரு ஆசிரியராய் நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றது... ஒரு வருடமே அவருடன் பயணிக்கும் அவர் மனைவி காதரின் கதாபாத்திரம் மிகவும் அருமை ஒரு சாதாரண எந்தவித முற்போக்கான எண்ணங்களும் இல்லாத ஒரு ஆசிரியர், அவர் செய்யும் சில செயல்களால் எவ்வாறு மாணவர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என விவரித்துக் கூறுகிறது இந்த நூல்.. மூன்று தலைமுறையாக பாடம் எடுக்கும் ஆசிரியராக மாணவனிடம் அவன் அப்பாவை பற்றியும் தாத்தாவைப் பற்றியும் பேசுவது அருமை... நாட்டை ஆள்பவர் வரும்போது கூட அவரை தன் மாணவராகவே பாவித்து மேடையில் பேசும் காட்சி சிறப்பு.... இறுதி காட்சிகள் எனக்கு ஏன் பிள்ளைகள் இல்லை என்கிறீர்கள் எனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள் உண்டு பெயர் சொல்லட்டுமா என ஒவ்வொரு மாணவன் பெயராக சொல்லும் காட்சி, உச்சம்... மொத்தத்தில் போயிட்டு வாங்க சார் போகாமலேயே நிலையாய் மனதில் நின்று விடுகிறார்... அனைத்து ஆசிரியர்களும் படிக்க...

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்