எது நல்ல பள்ளி - நூல் அறிமுகம்
எது நல்ல பள்ளி? என்று வினா வடிவிலேயே புத்தகத்தின் தலைப்பினை கொடுத்து புத்தகத்தினை திறப்பதற்கு முன்பாகவே சிந்திக்க வைத்து விடுகிறார் த.பரசுராமன்.
அரசு பள்ளியா?, தனியார் பள்ளியா? என்கிற போட்டிகளில் எல்லாம் சிக்காமல் தனது போக்கில் உரையாடல் வடிவில் புத்தகம் மூலம் நம்மிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார், இதில் நிச்சயமாக வெற்றி பெற்றது அவரே....
அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ இந்த 16 விஷயங்கள் இருந்தால் அது நல்ல பள்ளி என கூறி ஒரு 16 விஷயங்களை பட்டியலிடுகிறார் இதற்கு மேல் ஏதேனும் விடுபட்டால் அதனையும் சேர்த்துக் கொள்ள சொல்கிறார் தன்னடக்கத்தோடு...
எது நல்ல பள்ளி என்பதற்கு பதினாறு கருத்துகள்.
1) தாய்மொழி கல்வி
2) ஆசிரியர் மாணவர் விகிதம்
3) இப்படிப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள்
4) தண்டனைகள்
5) ஒட்டுமொத்த வளர்ச்சி
6) நூலக, ஆய்வக பயன்பாடு
7) ஆங்கிலத்தை கண்டு மிரளாமல் கற்று தரும் விதம்
8) மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனி கவனம்
9) எழுதியதற்கு மதிப்பெண்ணா? அல்லது புரிந்து கொண்டதற்கு மதிப்பெண்ணா?
10) திறன்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை
11) செயல்வழி கல்வி
12) குழு கற்றல் முறை அல்லது தோழமை கற்றல்
13) பாட நூலுக்கு முன்னுரிமையா? அல்லது பாட திட்டத்திற்கு முன்னுரிமையா?
14) ஆசிரியர்கள் கூடி பேசி விவாதம்
15) முன் தயாரிப்பு
16) தான் வாழும் உள்ளூர் குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்வி அளித்தல்
இவர் சொல்லும் இந்த பதினாறும் ஒரு பள்ளியில் இருந்தால் நிச்சயமாக அப்பள்ளி சிறந்த பள்ளியாக இருப்பதை தவிர வேறு வழியே இல்லை மிக அருமையான நூல்,
ஒரு பள்ளி சிறந்த பள்ளியாக திகழ்வது ஆசிரியர் கையில் உள்ளது.. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய தரமான புத்தகம்...
விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- எது நல்ல பள்ளி
புத்தகத்தின் ஆசிரியர்:-த.பரசுராமன்

Comments
Post a Comment