நம்பர் பூதம் - நூல் அறிமுகம்
இதுதான் நான் படிக்கும் முதல் கணித நாவல்...
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆயிஷா.இரா.நடராசன்..
மொழிபெயர்ப்பு நூல்களை படிக்கும்போது மனம் ஏனோ அதனுடன் ஒன்ற மறுக்கிறது அல்லது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல... ஆயினும் சில பக்கங்களை கடந்த பிறகு, நானும் டேவிட் கதாபாத்திரத்துடன் ஒன்றி, கனவு பூதத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன்..
டேவிட் ஒரு சிறுவன் கணிதத்தையும், கணித ஆசிரியரையும் கண்டு அஞ்சுபவன். அவன் கனவில் ஒரு பூதம், அதிலும் கணித பூதம்..
கணிதத்தையும், கணித ஆசிரியரையும் ஒரு பூதத்தைப் போல பார்த்து பயப்படும் டேவிட்... ஒரு கணித பூதத்தை ஆசிரியராக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இரவும் அந்த பூத்ததுக்காக காத்திருக்க வைத்திருக்கும் கதைக்களம் அருமை...
12 இரவுகள், 12 கனவுகள், 12 கணித பாடம் ஆனால் வகுப்பறையில் நடத்தும் நிகழ்வு போல் இல்லாமல், புதுமையாய், எளிமையாய், டேவிட்டுக்கு புரியும்படி, நமக்கும் ஆர்வம் அதிகரிக்கும்படி கொண்டு சென்று இருப்பது அருமை...
கணிதத்தில் எண்களோடு விளையாடுவது எவ்வளவு மகிழ்ச்சியையும், வியப்பையும் உண்டாக்கும் அனுபவம் என்பதை இந்த நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடியும்..
கணிதத்தை ரசிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நாவல்...
விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:-நம்பர் பூதம்
புத்தகத்தின் ஆசிரியர்:-ஆயிஷா. இரா.நடராசன்

Comments
Post a Comment