அருவியில் குளித்த ஐஸ் (தாம்போய் கதைகள்) - நூல் அறிமுகம்



பள்ளிக் குழந்தைகளால், அவர்களின் கற்பனையில் எழுந்த கதைகளினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இவ்வுத்தகம்...

கதைகளுக்கே உரிய எந்த விதிமுறையும் இவர்களுக்கு இல்லை, இவர்களினுடைய கற்பனைகளுக்கு எல்லை இல்லை, ஆயினும் இவர்களுடைய கதைகள் ரசிக்கும்படியாகவே இருந்தது...

ஒரு கதையின் அடுத்த கட்டத்தை என்னால் யூகிக்கவே முடியவில்லை அவர்களினுடைய கற்பனைப் போக்கு மிகவும் வித்தியாசமாக உள்ளது...

உதாரணமாக ஒரு ஊரில் ஒரு அரசன், அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகளாம், வறுமையின் காரணமாக, தங்கையின் திருமணத்திற்காக நான்கு மகன்களும் வேலைக்கு போகிறார்களாம்,

 நாட்டுக்கே அரசன், அவர்களுடைய மகன்கள் இளவரசர்கள் தங்களுடைய தங்கையின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் வேலைக்கு போகிறார்களா? இது என்ன? என்ற கேள்விக்கெல்லாம் இங்கு தேவையில்லை... சொல்லப்போனால் இவர்கள் கதை சொல்லும் விதத்தில் அந்த கேள்வி எல்லாம் எழவே இல்லை...

சில கதைகள் நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை போலவே உள்ளது. ஆனால், அந்த கதை நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை போல் முடிவதில்லை, முடியும் இடத்தில் புதிதாய் துவங்குகிறது, புதிய புதிய கோணத்தில் திரும்புகிறது, இறுதியில் முடியும் போது ஐயோ முடிந்து விட்டதே என ஏங்க வைக்கிறது..

எட்டாம் வகுப்பு மாணவன் கையூட்டை பற்றி எழுதுவதும், ஒன்பதாம் வகுப்பு மாணவி பசுமை பேணுவது பற்றி எழுதுவதும் போற்றக்கூடிய ஒன்று...

எதையும் எதிர்பார்க்காமல், குழந்தைகளோடு உட்கார்ந்து, அவர்கள் உலகத்தைப் பற்றி பேச விரும்புபவர்களும், பேசத் தெரிந்தவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்....

விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:-அருவியில் குளித்த ஐஸ் (தாம்போய் கதைகள்)
கதை தேர்வு:-வே.சுடர் ஒளி, ஈஸ்வர சந்தான மூர்த்தி


Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்