போயிட்டு வாங்க சார் - நூல் அறிமுகம்



போயிட்டு வாங்க சார்...

ஒரு ஆசிரியரின் வாழ்க்கை அனுபவம்...

சிப்பிங் பணி ஓய்வு பெற்ற பிறகு....

நீண்டு, எங்கும் நிறைந்து கிடக்கும் தனிமையில்,

அவர் அசைபோடும் அனுபவங்கள் நம்மை அசைய வைக்கின்றது....ஒரு ஆசிரியராய் நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றது...

ஒரு வருடமே அவருடன் பயணிக்கும் அவர் மனைவி காதரின் கதாபாத்திரம் மிகவும் அருமை

ஒரு சாதாரண எந்தவித முற்போக்கான எண்ணங்களும் இல்லாத ஒரு ஆசிரியர், அவர் செய்யும் சில செயல்களால் எவ்வாறு மாணவர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என விவரித்துக் கூறுகிறது இந்த நூல்..

மூன்று தலைமுறையாக பாடம் எடுக்கும் ஆசிரியராக மாணவனிடம் அவன் அப்பாவை பற்றியும் தாத்தாவைப் பற்றியும் பேசுவது அருமை...

நாட்டை ஆள்பவர் வரும்போது கூட அவரை தன் மாணவராகவே பாவித்து மேடையில் பேசும் காட்சி சிறப்பு....

இறுதி காட்சிகள் எனக்கு ஏன் பிள்ளைகள் இல்லை என்கிறீர்கள் எனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள் உண்டு பெயர் சொல்லட்டுமா என ஒவ்வொரு மாணவன் பெயராக சொல்லும் காட்சி, உச்சம்...

மொத்தத்தில் போயிட்டு வாங்க சார் போகாமலேயே நிலையாய் மனதில் நின்று விடுகிறார்...

அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகம்... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு எண்ணங்கள் மனதில் உதிப்பது இவ் புத்தகத்தின் சிறப்பு....

விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- போயிட்டு வாங்க சார்
புத்தகத்தின் ஆசிரியர்:-ச.மாடசாமி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்