பாஸ்தான் பெயில்.. பெயில் தான் பாஸ் - நூல் அறிமுகம்



கல்வி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? நாம் செல்லும் பாதை சரியான பாதைதானா? மாணவர்கள் உற்பத்தி பொருட்களா? என பல கேள்விகளை 13 கட்டுரைகளில் அலசுகிறது இப்புத்தகம்...

மெக்காலே முதல் கஸ்தூரி ரங்கன் வரை உள்ள அனைத்து கல்விக் கொள்கைகளின் நன்மை தீமைகளை அலசி.. உலகின் முதன்மையான கல்வி வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளின் கல்விக் கொள்கையுடனும், கல்வி முறையுடனும் ஒப்பிட்டு, நாம் கல்வியில், கல்விக் கொள்கைகளில் எந்த இடத்தில் நிற்கிறோம் என கண்முன் காட்டுகிறது இப் புத்தகம்...

பெரிய பெரிய கம்பெனிகளுக்கு தொழிலாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் கல்வி முறையில், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல், ஆசிரியர் பயிற்று நிறுவனங்கள் காற்று வாங்குகின்றன என கண்ணீரோடு கூறும் கட்டுரை சிறப்பு..

அயல்நாடுகளில் (கியூபா) ஆசிரியராய் பணிபுரிய என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்! என்னென்ன செய்ய வேண்டும்! அதனால் அவர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள்! என்பதை அறியும்போது, நாம் செய்து கொண்டிருக்கும் செயலுடன் ஒப்பிட்டு பார்த்து, நம் தரத்தையும், பதம் பார்த்துக் கொள்ள முடிகிறது....

பரிட்சைக்கு வருகின்ற புத்தகங்களிடம் பரிட்சைக்கு வராத புத்தகங்கள் தோற்று நிற்பது நம் நாட்டினுடைய சாபக்கேடு..

புழுதி படியாத நூலகம், அறிவில் புழுதி படியாத மாணவர்களை உண்டாக்கும்.. அதற்காக படைக்கப்படக்கூடிய சிறார் இலக்கியங்கள் பற்றியும் அதில் தமிழ்நாட்டின் பங்கு பற்றியும் அழகாக கூறுகிறது பரிட்சைக்கு வராத புத்தகங்கள் கட்டுரை...

இறுதியாக தேர்வுகளில் ஃபெயிலாகி பாஸ்(BOSS) ஆகிய பல ஆளுமைகளை பட்டியலிட்டு தேர்வு மட்டுமே இறுதி தீர்ப்பு அல்ல தீர்ப்பு எப்பொழுதும் உன் கையில் உன் முயற்சியில் என படிக்கும் மாணவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து முடிகிறது இப் புத்தகம்

விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- பாஸ்தான் பெயில்.. பெயில் தான் பாஸ்...
புத்தகத்தின் ஆசிரியர்:-ஆயிஷா இரா. நடராசன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்