100 நாற்காலிகள் - நூல் விமர்சனம்



இன்று நான் படித்த புத்தகத்தின் பெயர் 100 நாற்காலிகள், இக்கதையை எழுதியவர் ஜெயமோகன் அவர்கள்

குறவன் குறத்திப் பழங்குடியினம் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நாயாடி என்று ஒரு பழங்குடியினம் இருப்பதை நான் இந்த புத்தகத்தில் படித்த பின் தான் தெரிந்து கொண்டேன், இவர்களின் வாழ்க்கை முறையைப் படித்த பின்பு என் இதயம் படபடத்து விட்டது

பிரஜானந்தர் உன் அம்மாவை பார்த்துக் கொள் என்று சொன்ன பின் தான் எனக்கு அம்மா இருக்கிறார் என உணர்ந்தான் என நான் நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தை விவரம் வந்தவர்கள் அதாவது பெரியவர்கள் மேல் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் படிப்பது நல்லது.

இந்த புத்தகத்தின் மூலம் நான் புரிந்து கொண்டது எந்த சூழ்நிலையிலும் நம் அப்பா அம்மாவை விளங்கி வைக்கவோ, துரத்தவோ, மறக்கவோ கூடாது என இக்கதை எனக்கு உணர்த்தியது மேலும் எதுவும் நிரந்தரம் அல்ல

இந்த புத்தகத்தை நான் படித்த போது என் கண்களை கலங்கடித்தது இக்கதையில் நான் நினைத்து பதரியது, பயந்தது எல்லாம் நாயாடி பழங்குடியின் மக்களை நினைத்து தான்.

இது போலவும் இன்னும் மக்கள் உயிர் வாழ்கிறார்களா? என்று என்னை யோசிக்க வைத்த முதல் புத்தகம் இதுவாகும்.

இக்கதையில் தெரிந்து கொண்டது எத்தனை நூறு நாற்காலிகளில் அமர்ந்தாலும், அதில் உள்ள அதிகாரத்தில் மூழ்கி விடாமலும், அதில் உள்ள பிரச்சனைகளை கண்டு அஞ்சி ஒதுங்கி விடாமலும், நடுநிலையான ஒரு மனது வேண்டும்.. நன்றி

புத்தக விமர்சனம் செய்தவர்:- மூ.ஜோஷிகா
வகுப்பு:- 11ஆம் வகுப்பு
பள்ளி:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
வெங்கரைக்கோட்டைக்காடு

புத்தகத்தின் பெயர் :- 100 நாற்காலிகள்
ஆசிரியர் பெயர் :- ஜெயமோகன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்