மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை - நூல் அறிமுகம்
 
   கர்நாடக சங்கீத உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக விளங்கும் டி எம் கிருஷ்ணா அவர்கள்... தன்னைச் சார்ந்த சமூகத்தில் உள்ளவர்களால், கர்நாடக சங்கீத உலகில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார்..   அந்த வரிசையில் அவர் எழுதிய Sebastian and sons என்ற நூலின் தமிழாக்கமே மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை என்ற நூல்..  மிருதங்கம் செய்பவர்களுக்கும், அதனை வாசிப்பவர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளையும், அதில் உள்ள நுட்பமான சாதிய அரசியலையும் விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தும் ஓர் ஆவண நூலாகவே இந்த நூல் திகழ்கிறது..  இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் மற்ற இசைக்கருவிகளை  பயன்படுத்துவது போல் மிருதங்கத்தை அவ்வளவு எளிதாக பயன்படுத்த இயலாது.. அதற்கு அதை செய்பவர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..   மிருதங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் பழுதுபடலாம்.. மிருதங்கத்தின் சுருதி எப்பொழுது வேண்டுமானாலும் குறையலாம்.. அதை சரி செய்வதென்பது வாசிப்பவர்களால் பெரும்பாலும் இயலாத காரியமாக உள்ளது எனவே மிருதங்கம் செய்யும் கலைஞர் ஒருவர் எப்பொழுதும் மிருதங்கம் வா...
 
 
 
 
 
 
