யானை டாக்டர் - நூல் அறிமுகம்
ஒரு உன்னத படைப்பை வாசித்து முடித்த முழு திருப்தியும் கிடைத்த அனுபவத்துடன் எழுதுகின்றேன் இவ் விமர்சனத்தை... ஒரு யானையின் பிணக் கூராய்வுடன் அறிமுகமாகிறார் டாக்டர் கே எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி... ஒரு யானையை, அதுவும், காட்டில் பல நாட்களுக்கு முன் இறந்து கிடக்கும் யானையின் உடலை பிணக்கூறாய்வு செய்வதற்கு, ஒரு மனிதனுக்கு எவ்வளவு மனோபலம் வேண்டும் அல்லது இயற்கையின் மீது எவ்வளவு காதல் வேண்டும் அல்லது தன் பணியின் மீது எவ்வளவு நேசம் வேண்டும் என்பதை புரிய வைக்க எழுத்தாளர் கை கொண்டு உள்ள யுக்தி மிகவும் சிறந்தது... பிணக்கூறாய்வு செய்பவருடைய மனநிலை பற்றி எதுவும் கூறாமல் அதை பார்த்தவரின் மனநிலை பற்றி மிக விரிவாக விவரித்து, யானை டாக்டர் மீது, யானையை விட பன்மடங்கு பெரிய மரியாதையை விதைத்து விடுகின்றார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்... வன காவலர், யானை டாக்டரிடம் முதன் முதலில் உரையாடும்போது, யானை டாக்டர் சொல்வதாக, எழுத்தாளர் எழுதியுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது... ஆழ்ந்து படித்தால், உண்ண மட்டுமே தெரிந்த புழுக்கள் கூட உங்களுடைய வளர்ப்பு பிராணியாக மாறலாம் ஆச்சரிய...