கிறுக்கல்கள் -அறிமுகம்
புதுமையைக் கூட புதுமையாக செய்ய முயலும் புதுமையான மனிதன் பார்த்திபன் அவர்கள் எழுதிய கிறுக்கல்கள் புத்தகத்தில் மட்டும் புதுமைக்கு பஞ்சமா இருக்கப் போகிறது... புத்தகத்தை திறந்த உடனே தன் முதல் கிறுக்கள்கள் என தன் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு இருப்பதும்.. மனைவிக்கு "என்னை நேசித்த முதல் கவிதை" என எழுதி மனைவியின் புகைப்படத்தில் தலையில் ஐஸ் கட்டியை வைத்திருப்பதும்.. முதல் கவிதை என்ற வார்த்தையை ஆய்வுக்கு உட்படுத்தி முதல் என்ற வார்த்தை பொருத்தமா? உண்மையா? என விளக்கி இருப்பதும்.. இரண்டு பக்கங்களில் ஒன்றுமே எழுதாமல் ஒரே ஒரு கரும்புள்ளியை மட்டும் வைத்து நிரப்பி இது கவிதையா என நம்மை அடுத்த பக்கத்தை திருப்பாமல் யோசிக்க வைப்பதும்... அடுத்த பக்கத்தில் "வெறும் புள்ளி மட்டும் தான் நான் வியாபித்திருக்கும் வெற்றிடமாக இதயம் முழுவதும் நீ" என எழுதி முதல் இரண்டு பக்கத்திற்கு வலு சேர்த்து இருப்பதும்.. கவிதை புத்தகம் என நினைத்து புரட்டிக் கொண்டே வரும்போது நடுவில் தன் முதல் படம் பற்றிய கட்டுரை எழுதி இருப்பதும்.. திடீரென ஆங்கிலத்தில் ஐந்து வரியில் ஐந்து சொற்களை ...