தாயம் - நூல் அறிமுகம்
மஹத்ரயா ரா என்ற புனைப்பெயர் கொண்ட T T.ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்ட Unposted letter என்ற நூலின் தமிழாக்கமே தாயம் என்ற இந்த புத்தகம்.. மொழிபெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.. படிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஒரு இடத்தில் கூட வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு... இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகள் கொண்ட ஒரு நூல், இந்நூலின் சிறப்பே, கட்டுரையினுடைய நீளம் தான்.. இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்குள்ளாகவே அனைத்து கட்டுரைகளும் முடிவுறுகின்றன.. மிகக் குறைந்த அதேசமயம் சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நறுக்கென வார்த்தெடுத்த கட்டுரைகள்... சிலருக்கு புத்தகம் படிக்கும் போது முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிடும் பழக்கம் இருக்கும், நீங்கள் அப்படிப்பட்ட வாசகர்களாக இருந்தால், இப் புத்தகம் முழுமையும் நீங்கள் அடிக்கோடு இட வேண்டி இருக்கும், அவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து முன் பின் நிறுத்தி மனதோடு பொருத்தி எழுதப்பட்ட கட்டுரைகள்.. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு கூட நம்மிடம் ஏதோ ஒரு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.. புத்தக து...