இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்
சுற்றுப்புற சூழலுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.? * மரம் வளர்த்துள்ளேன்.. * பேரணிகள் சென்றுள்ளேன்.. * நெகிழிப்பை உபயோகத்தை குறைத்துள்ளேன்.. * இயன்ற அளவு நீர் மேலாண்மை செய்துள்ளேன்.. * எரிபொருட்களை, மின் சாதனங்களை, காகிதங்களை குறைவாக பயன்படுத்துகின்றேன்.. எனக் கூறுவீர்கள் அல்லவா நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் சுற்றுச்சூழலுக்கு கடுகளவு கூட உதவி புரிவதாய் இல்லை என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா?? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? வினாவை எழுப்பி.. விடையையும் கூறுகிறது இப்புத்தகம்.. ஆம் ஒரு நூறு மரக்கன்றுகளையும், வருடம் தோறும் ஆயிரம் விதை பந்துகளையும், கையில் மஞ்சள் பையுடனும் சுற்றுச்சூழல் மைந்தன் என திரிந்த என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டியது இப் புத்தகம்... யானை பசிக்கு எறும்பு தீனி என்பது போல நம் செயல்கள் உள்ளன என உரக்க கூறி.. அழிப்பவனாலும், ஆள்பவனாலும் மட்டுமே இச்சுற்றுச்சூழலை காக்க முடியும் நம்மால் காப்பது போல் நடிக்க மட்டுமே முடியும் என உணர்த்தி உள்ளது இப்புத்தகம்.. கனவு நாயகனென நம் அனைவராலும் ம...